Rosemary Benefits: சமையல் பயன்பாடுகளுக்கு நறுமண மூலிகைகளாக பல இடங்களில் ரோஸ்மேரி பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உணவுகளை நறுமணம் உள்ளதாக மாற்றுவதோடு முடி வளர்ச்சிக்கும் சக்திவாய்ந்த பொருளாக ரோஸ்மேரி உள்ளது என்பது பலரும் அறிந்திருப்பதில்லை.
பல நூற்றாண்டுகளாக, ரோஸ்மேரி அதன் மருத்துவ குணங்களுக்காக சிறப்பு வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. மேலும் முடி ஆரோக்கியத்திலும் இது சிறந்து விளங்குகிறது.
முடி வளர்ச்சிக்கான ரோஸ்மேரியின் நன்மைகள்

முடி வளர்ச்சிக்கான ரோஸ்மேரியின் நன்மைகள் குறித்து பார்க்கையில்,
- முடி வேர்களுக்கான பயன்கள்
ரோஸ்மேரி எண்ணெயில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் உர்சோலிக் அமிலம் போன்ற கலவைகள் உள்ளன, அவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட சுழற்சி முடி வேர்களுக்கு நன்மை பயக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வதையும் தடுக்கிறது.
- DHT பிரச்சனை
டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (டிஹெச்டி) என்பது சில நபர்களில் முடி உதிர்தல் மற்றும் இழப்புக்கு காரணமான ஹார்மோன் ஆகும். ரோஸ்மேரியில் உர்சோலிக் அமிலம் உள்ளது, இது DHT உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது, இதனால் முடியைப் பாதுகாக்கிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- முடியை பலப்படுத்தும்
ரோஸ்மேரியில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முடி வேர்களை வலுப்படுத்த உதவும். இது முடி உடைவதைத் தடுக்கும் மற்றும் உங்கள் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அடிப்படையில் இருந்து மேம்படுத்தும்.
- பொடுகு மற்றும் உச்சந்தலை எரிச்சல்
ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் எரிச்சலூட்டும் பண்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் பொடுகை குறைக்கவும் முடியும். ஆரோக்கியமான உச்சந்தலை என்பது முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இது புதிய முடியை செழித்த வளர பெரிதளவு உதவுகிறது.
- முடி அமைப்பை மேம்படுத்தும்
ரோஸ்மேரியில் உள்ள தனித்துவ நன்மைகள் உங்கள் தலைமுடியை மென்மையாக்க பெரிதளவு உதவும். மேலும் பளபளப்பாக்கும். இது உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை அதிகரிக்கும்.
ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தும் வழிகள்
உங்கள் தலைமுடிக்கு ரோஸ்மேரியை எவ்வாறு பயந்படுத்துவது என இப்போது பார்க்கலாம்.
- ரோஸ்மேரி எண்ணெய் மசாஜ்
சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை எடுத்து தேங்காய் எண்ணெய் போன்றவைகள் உடன் கலந்துக் கொள்ளவும். இதை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடத்திற்கு பின் ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
- ரோஸ்மேரி கலந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்
வழக்கமான உங்கள் முடி பராமரிப்பு பொருட்களில் ரோஸ்மேரி சாறு உள்ளிட்டவைகளை கலந்துக் கொள்ளவும். இதை தினசரி பயன்படுத்துவது உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கும்.
ரோஸ்மேரி சாறு தயாரிப்பது எப்படி?

ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் வேகவைத்து, அதை ஆறவிடவும். ஷாம்பு போட்டுக் குளித்த பின் இறுதியாக இதை தலை அலச பயன்படுத்தலாம்.
DIY ரோஸ்மேரி ஹேர் மாஸ்க்
ரோஸ்மேரி எண்ணெயை தயிர், தேன் அல்லது முட்டை போன்ற பிற இயற்கை பொருட்களுடன் சேர்த்து ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க் ஆக பயந்படுத்தலாம். இந்த ஹேர் மாஸ்க்கை 30-60 நிமிடங்கள் தலையில் ஊறவிட்டு பின் கழுவவும்.
ரோஸ்மேரி முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி தனிப்பட்ட வழிக்காட்டுதல்களை பெறுவது நல்லது.
ரோஸ்மேரியை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உங்கள் வேர்களை வலுவாகவும் வைத்திருக்க உதவும். ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு OnlyMyHealth உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Source: FreePik