Rosemary for Hair: தலைமுடி நீளமாக, அடர்த்தியாக வளர… இந்த 3 ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Rosemary for Hair: தலைமுடி நீளமாக, அடர்த்தியாக வளர… இந்த 3 ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க!


முடி உதிர்தல் என்பது பலரைத் துன்புறுத்தும் ஒரு பெரிய பிரச்சனை. உதிர்ந்த முடி மீண்டும் வளராதபோது, ​​முடியின் அடர்த்தியும், அழகும் குறைந்துவிடும். மேலும், குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இயற்கையாக முடி வளராது மற்றும் முடி வளர உதவும் பல வழிகள் உள்ளன. அதில் எண்ணெய்யும் ஒன்று. சேதமடைந்த முடியை மீண்டும் வளர உதவும் சில சிறப்பு எண்ணெய்கள் உள்ளன. இவற்றை வீட்டிலும் தயாரிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி ஆகியவை முடி வளர்சிக்கு உதவக்கூடிய முக்கிய எண்ணெய் வகைகளாகும். தேங்காய் எண்ணெய் பழங்காலத்திலிருந்தே முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கு பளபளப்பு, மிருதுவான தன்மை மற்றும் கூந்தலுக்கு இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது. பொடுகு போன்ற இயற்கை பிரச்சனைகளுக்கும் சிறந்தது.

ஆமணக்கு எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்க்கு அடுத்தப்படியாக ஆமணக்கு எண்ணெய் பொதுவாக முடி வளர்ச்சிக்கு நல்லது. முடியோ, தாடியோ, புருவமோ எதுவாக இருந்தாலும் அவை நன்றாகவளர இது உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ரிசினோலிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஈ, ஃபீனாலிக் அமிலங்கள், அமினோ அமிலங்கள், டெர்பெனாய்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளிட்ட பல பயனுள்ள கூறுகள் உள்ளன.

ரோஸ்மேரி:

ரோஸ்மேரி ஒரு இயற்கை மூலிகையாகும், இது முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ரோஸ்மேரி எண்ணெய் என்பது அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். அதன் மிகப்பெரிய நன்மை கார்னோசிக் அமிலம் எனப்படும் மூலப்பொருள் ஆகும். இது நமது இறக்கும் செல்களை புதுப்பிக்கிறது மற்றும் நமது தோல் மற்றும் முடிக்கு நன்மை அளிக்கிறது.

ரோஸ்மேரி எண்ணெய் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் இது நல்லது.

இந்த ஸ்பெஷல் ஆயிலை தயார் செய்வது எப்படி?

இந்த குறிப்பிட்ட எண்ணெய் தயாரிக்க மிகவும் எளிதானது. இதற்கு இரண்டு எண்ணெய்களையும் சம அளவு எடுத்து கலக்கவும். நல்ல தூய எண்ணெய் மட்டுமே நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதில் ரோஸ்மேரி இலைகளை சேர்க்கவும். இது ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தும் முன்பு தலைமுடியை நன்றாக உலர்த்த வேண்டும். முடிந்தவரை தலைக்கு குளித்த பின்னர், ஒருநாள் கழித்து இந்த எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. மேலும் இதனை பூசுவதற்கு முன், இரட்டை கொதி முறையின்படி சூடாக்கி தடவுவது நல்லது. இல்லையென்றால், இதில் சிறிது எடுத்து வெயிலில் சூடுபடுத்தவும். இதை இரவில் படுக்கும் முன் தடவி மறுநாள் காலையில் கழுவவும். இது அதிக நன்மை பயக்கும். லேசாவை மட்டும் தடவினால் போதும். இது முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ImageSource: Freepik

Read Next

Seeds For Hair Growth: பொசு பொசுனு அடர்த்தியா முடி வளர இந்த 6 விதைகள் போதும்

Disclaimer

குறிச்சொற்கள்