மெல்லிய முடியை அடர்த்தியா மாற்ற இந்த ரெமிடிஸை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

How to thicken thin hair naturally: முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இதில் மெல்லிய முடியின் வேர்களை அடர்த்தியாக்க, மருத்துவர் பரிந்துரைத்த சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மெல்லிய முடியை அடர்த்தியா மாற்ற இந்த ரெமிடிஸை இப்படி யூஸ் பண்ணி பாருங்க


How to make thick hair look thin naturally: இன்றைய மன அழுத்தம் நிறைந்த காலகட்டத்தில் வாழ்க்கை முறை, மாசுபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி மெலிதாவது, முடி உதிர்வு மற்றும் இன்னும் சில முடி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இது ஒருவரின் நம்பிக்கையை இழக்க வைக்கலாம். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க மக்கள் பலரும் விலையுயர்ந்த பொருட்கள் அல்லது சிகிச்சைகளைக் கையாள்கின்றனர். ஆனால்சில நேரங்களில் இது பயனுள்ளதாக இருக்காது அல்லது பக்க விளைவுகளைத் தரக்கூடும்.

இந்நிலையில் மெல்லிய முடியை அடர்த்தியாக மாற்ற சிலர் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களைக் கையாள்கின்றனர். அதே சமயம், இவை ரசாயனங்கள் இல்லாதவை மற்றும் முடி வேர்களை வலுப்படுத்துவதோடு உச்சந்தலையை வளர்க்கிறது. மேலும் இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வைக் குறைக்கலாம். மெல்லிய முடியை அடர்த்தியாக மாற்றுவதற்கு சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதுடன், சரியான வாழ்க்கை முறையைப் பராமரித்தால், நேர்மறையான முடிவுகளைப் பெறலாம்.

இதில் மெல்லிய முடியின் கோட்டை அடர்த்தியாக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள பிரஞ்சல் ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் மணீஷ் சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Tips: வெறும் இரண்டே வாரத்தில் கருகருன்னு அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

அடர்த்தியாக முடி வளர உதவும் வீட்டு வைத்தியங்கள்

வெங்காயச் சாறு

வெங்காயச் சாற்றில் சல்பர் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது முடி வேர்களை பலப்படுத்த உதவுகிறது. இதற்கு வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றைப் பிழிய வேண்டும். பின்னர் பருத்தியின் உதவியுடன் முடியின் வேர்களில் தடவலாம். இதை அரை மணி நேரம் வைத்து பிறகு ஷாம்பு பயன்படுத்தலாம். இந்தக் கலவையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும். அதே சமயம், துர்நாற்றம் இருந்தால் அல்லது உச்சந்தலையில் எரிச்சல் ஏற்பட்டால் இதை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

வெந்தயம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடிக்கு தயிர் பயன்படுத்துவது உச்சந்தலையை குளிர்விக்கிறது. இதற்கு 2 தேக்கரண்டி அளவிலான வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, பின் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து அதனுடன் 2 தேக்கரண்டி தயிர் சேர்க்க வேண்டும். இதை முடியின் வேர்களில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு மாதத்திற்கு 4 முறை தடவ வேண்டும். இதில் உச்சந்தலை மிகவும் எண்ணெய் பசையாக இருப்பின், பிறகு தயிரின் அளவைக் குறைக்கலாம்.

நெல்லிக்காய் பொடி மற்றும் தேன்

நெல்லிக்காயில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் தேன் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இதற்கு 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் செய்து, அதை முடியின் வேர்களில் தடவ வேண்டும். இதை 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla For Hair: தலைக்கு நெல்லிக்காய் பயன்படுத்தும் முன்.. இந்த மூணு விஷயங்கள நியாபகத்துல வச்சிக்கோங்க...!

கற்றாழை ஜெல் மசாஜ்

கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது முடியின் துளைகளைத் திறப்பதன் மூலம் முடியை வளர்க்கிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை ஆதரிக்கலாம். ஒரு புதிய கற்றாழை இலையிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து, உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை 1 மணி நேரம் வைத்து, பிறகு கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். எனினும், இதை பயன்படுத்திய பிறகு அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக இதைக் கழுவி விடலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை பயன்பாடு

முடியின் வேர்களுக்கு ஆழமாக ஊட்டமளிப்பதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இதில் கறிவேப்பிலை சேர்ப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதற்கு 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் 10-12 கறிவேப்பிலைகளைச் சேர்த்து லேசாக சூடாக்க வேண்டும். பின்னர் எண்ணெயை குளிர்வித்து, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் லேசான ஷாம்பூ கொண்டு கழுவலாம். இதை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம். ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.

மெல்லிய முடியை அடர்த்தியாக்க இந்த வீட்டு வைத்தியங்கள் மட்டுமல்லாமல், சீரான உணவு, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதும் அவசியமாகும். மேலும், எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்வதற்கு முன், ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து, ஏதேனும் தோல் எதிர்வினை காணப்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Oils For Hair Growth: தலைமுடி தரையைத் தொடும் அளவுக்கு வளரனுமா? - இந்த எண்ணெய்களை பயன்படுத்திப் பாருங்க!

Image Source: Freepik

Read Next

உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா? மழைக்காலத்தில் உங்க சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்!

Disclaimer