Protein Rich Foods: கூந்தல் டிரிபிள் மடங்காக வேகமா வளர இந்த புரோட்டீன் உணவுகளைச் சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Protein Rich Foods: கூந்தல் டிரிபிள் மடங்காக வேகமா வளர இந்த புரோட்டீன் உணவுகளைச் சாப்பிடுங்க

முடி வளர்ச்சியை ஆதரிக்கும் புரத உணவுகள்

தலைமுடி வளர்ச்சியை ஆதரிக்க உதவும் சில புரத உணவுகளைக் காணலாம்.

கிரேக்க தயிர்

இது கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த மூலமாகும். இதில் அதிகளவிலான புரத உள்ளடக்கம் உள்ளது. இவை முடி அமைப்பு மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கூடுதலாக, கிரேக்க தயிரில் வைட்டமின் B5 ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கிரேக்க தயிரை சாதாரணமாக சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் மற்றும் விதைகளுடன் சத்தான காலை அல்லது சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Loss: ஒரே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த ஸ்பெஷல் சூப்யை குடியுங்க!

முட்டை

முட்டை ஒரு சிறந்த காலை உணவாகக் கருதப்படுகிறது. முட்டையில் புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பயோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்துமே முடி ஆரோக்கியத்திற்கு சிறந்த சக்தியாக விளங்குகிறது. ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் நிறைந்துள்ளது. புரோட்டீன் முடியைப் பலப்படுத்த உதவுகிறது. அதே சமயம், பயோட்டின் (வைட்டமின் பி7) கெரட்டின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இவை முடி வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்கிறது. முட்டையில் உள்ள செலினியம் மற்றும் துத்தநாகம் போன்றவை ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதாம்

இது ஒரு சுவையான சிற்றுண்டியாக இல்லாமல், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்ததாகும். அதன் படி, ஒரு கைப்பிடி அளவிலான பாதாமில் சுமார் 6 கிராம் புரதம் நிறைந்துள்ளது. பாதாமில் உள்ள புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் போன்றவை முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியைப் பராமரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும், முடியை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான உச்சந்தலையை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதில் பாதாம் பருப்பை தானியங்கள் அல்லது தயிரில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது பாதாம் வெண்ணெயை ஸ்ப்ரெட்கள் மற்றும் ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம்.

சால்மன்

இது உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் D மற்றும் B12 போன்றவற்றை வழங்குகிறது. அதன் படி, 100 கிராம் அளவிலான சால்மன் மீனில் சுமார் 20 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. சால்மனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன் போன்றவை உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த சால்மன் மீன்களை வறுத்து, சூடாக்கி அல்லது பாஸ்தாவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சத்தான ஊக்கத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Foods: முடி வேகமாக வளர இந்த உணவுகளை முயற்சிக்கவும்!

பருப்பு

பருப்பு வகைகள் ஒரு தாவர அடிப்படையிலான புரத சக்தியைக் குறிக்கிறது. அதன்படி, ஒரு சமைத்த கோப்பைக்கு சுமார் 18 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது. இதில் இரும்பு, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. புரதம் ஆனது கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது. மேலும், மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜனை அடைவதை உறுதிசெய்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தவிர, ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும், உச்சந்தலை மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இதை சாலட்கள், சூப்கள் போன்றவற்றில் பருப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

குயினோவா

குயினோவா ஒரு முழுமையான புரதமாகும். இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. அதன் படி, ஒரு சமைத்த குயினோவாவில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. குயினோவாவில் உள்ள அமினோ அமிலங்கள் மயிர்க்கால் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் முக்கியமானவை ஆகும். இந்த இரும்புச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கான புரதத் தொகுப்பை வழங்குகிறது.

இவ்வாறு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தலைமுடி வளர்ச்சியை ஆதரிப்பதுடன், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Vitamins: முடி வளர்ச்சிக்கு சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது பயனுள்ளதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Image Source: Freepik

Read Next

Hair Growth Tea: முடி நீளமா திக்கா வளர இந்த டீ குடிங்க.!

Disclaimer