பெண்கள் தங்கள் முடியை நீளமாகவும், அடத்தியாகவும், கருமையாகவும் வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் மாசு, புறஊதா கதிர்கள் ஆகியவை முடி உதிவை ஏற்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த, பல விதமான எண்ணெய்கள், க்ரீம்கள், சாம்புகள் போன்ற முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துகின்றன. ஆனால் உணவு மூலமும் முடியை வலுப்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறியவில்லை. சில உணவில் உள்ள ஜிங், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி, பி12, சல்பர், பயோட்டின் போன்ற பொருள்கள் நிறைந்துள்ளன. அவை முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், முடியை அடர்த்தியாகவும் வளர ஊக்குவிக்கிறது. முடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
இதையும் படிங்க: சுருட்டை முடியுடன் போராட்டமா? இதோ 8 சூப்பர் டிப்ஸ்!
முக்கிய கட்டுரைகள்
கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளன. இவை மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி உதர்வை தடுக்க உதவுகின்றன. தினமும் கேரட்டை பச்சையாகவோ, ஜூஸாகவோ உட்கொண்டால், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை நரை முடி மற்றும் பொடுகு பிரச்சனையை தீர்க்க உதவுகின்றன. தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர முடி சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
கீரை
கீரையில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இது மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, இரும்புச் சத்து மற்றும் போலேட்டுகள் ஆகியவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன.
ஓட்ஸ்

ஓட்ஸில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஜிங்க், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. மேலும் இதில் உள்ள பீட்டா க்ளுக்கன், மயிர்கால்களை வலுவாக்க உதவுகிறது.
முட்டை
முட்டை புரதத்தின் ஆதாரமாக திகழ்கிறது. இதில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி 12, புரதம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.
Image Source: Freepik