How to consume Moringa for hair growth: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை காரணமாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக, போதிய பராமரிப்பு மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமையால் முடி உதிர்வு, முடி வறட்சி மற்றும் இன்னும் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இந்த சூழ்நிலையில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சீரான உணவில் கவனம் செலுத்துவதன் மூலமும், சரியான முடி பராமரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
அதன் படி, நம் அன்றாட உணவில் சேர்க்கும் சில உணவுப் பொருள்கள் முடி ஆரோக்கியத்திற்கு பங்கு வகிக்கிறது. அவ்வாறு முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் உணவுப் பொருள்களில் முருங்கை முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மொரிங்கா அல்லது முருங்கை ஊட்டச்சத்து நிறைந்த தாவரமாகும். இது முடி வளர்ச்சி உட்பட பல்வேறு சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளால் நன்கு அறியப்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு முருங்கை எவ்வாறு உதவுகிறது மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Leaves For Hair: ஒரே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த இலைகளை யூஸ் பண்ணுங்க!
முடி வளர்ச்சிக்கு முருங்கை தரும் நன்மைகள்
முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான முடிக்கு உதவும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் முருங்கையில் நிறைந்துள்ளது.
- முருங்கையில் வைட்டமின் ஏ, சி, பி6 மற்றும் பயோட்டின் போன்ற பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. மேலும், இந்த வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் முடியை உறுதியாக வைத்து, முடி உதிர்வைக் குறைக்கிறது.
- முருங்கையில் முடியின் கட்டமைப்பை உருவாக்கும் புரதமான கெரட்டின் உற்பத்திக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. எனவே முருங்கையை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் ஆரோக்கியமான முடியை உற்பத்தி செய்வதற்கான கட்டுமான தொகுதியைப் பெறலாம்.
இதில் பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் அமிலம், மற்றும் குர்செடின் போன்ற சில ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை முடி மற்றும் உச்சந்தலையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இது தவிர, முருங்கையில் உள்ள துத்தநாகம், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் முருங்கையில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மயிர்க்கால்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
முடி வளர்ச்சிக்கு முருங்கையை எப்படி பயன்படுத்துவது?
முடி அடர்த்தியாக வளர, முருங்கையைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
முருங்கை எண்ணெய்
முருங்கை மரத்தின் விதைகளிலிருந்து, பிரித்தெடுத்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Stopped Growing: திடீரென முடி வளர்ச்சி தடைப்படுவது ஏன் தெரியுமா? இதோ காரணம்!
மசாஜ் செய்ய
முதலில் சிறிதளவு மொரிங்கா எண்ணெயை சூடாக்கி, உச்சந்தலையில் சுமார் 10-15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது முடியின் மயிர்க்கால்களின் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இதை உச்சந்தலையில் இரவு முழுவதும் வைத்து, பிறகு லேசான ஷாம்பு கொண்டு கழுவலாம்.
ஹேர் மாஸ்க்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆர்கான் எண்ணெய் போன்ற சில ஆர்கானிக் எண்ணெய்களுடன் முருங்கை எண்ணெயைக் கலந்து ஹேர் மாஸ்க்காக் தயார் செய்யலாம். இதை தலைமுடியில் குறிப்பாக உச்சந்தலை மற்றும் முனைகளில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு தலைமுடியைக் கழுவலாம். இது முடியை வலிமையடையச் செய்யவும், முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது.
முருங்கை பொடி
இது எளிதாக மற்றும் பலவழிகளில் பயன்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்றாகும்.
உணவில் நேரடியாக சேர்ப்பது
முருங்கைப் பொடியை நம் அன்றாட உணவில் நேரடியாக சேர்ப்பது சிறந்த வழியாகும். இவ்வாறு எடுத்துக் கொள்வது உடலுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஸ்மூத்திகளில்
தினசரி நாம் அருந்தும் ஸ்மூத்திகளில் முருங்கைப் பொடியை சேர்க்கலாம். அதன் படி, வாழைப்பழங்கள், மாம்பழங்கள், பெர்ரி, அல்லது கீரை போன்ற இலை பச்சை காய்கறிகளுடன் கூட இதைக் கலந்து எடுத்டுக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair loss prevention tips: தூங்கும் போது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இதெல்லாம் செய்யுங்க
தண்ணீர் அல்லது சாறு
மொரிங்கா பொடியை நேரடியாக தண்ணீர் அல்லது பழச்சாறுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் பொடியை தண்ணீர் அல்லது சாறுடன் கலந்து, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இருமுறை குடித்து வர நல்ல பலனைப் பெறலாம்.
முருங்கை டீ
முருங்கை பொடியை வெந்நீரில் ஊற்றி, புத்துணர்ச்சியூட்டும் பானமாக முருங்கை டீயை அருந்தலாம். இதனுடன் சுவைக்காக எலுமிச்சை அல்லது தேன் சேர்க்கலாம்.
முருங்கை இலைச்சாறு
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மற்றொரு வழியாக முருங்கை இலைச்சாறு எடுத்துக் கொள்வதாகும். இது திரவமாகவோ அல்லது சீரம்களில் ஒரு மூலப்பொருளாகவோ பயன்படுத்தலாம். இந்த சாற்றில் உள்ள செறிவூட்டப்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலால் விரைவில் உறிஞ்சப்படுகிறது. தினசரி உணவில் சில துளிகள் முருங்கை இலைச் சாற்றை சேர்க்கலாம்.
இது போன்ற பல்வேறு வழிகளில் முருங்கையை எடுத்துக் கொள்வது முடி வளர்ச்சியைத் தூண்டி, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair loss supplements: முடி உதிர்வால் அவதியா? இந்த சப்ளிமெண்ட்ஸ் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik