How To Make Rose Aloe Vera Skin Toner At Home In Tamil: ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற வேண்டியது என்பது அனைவரின் விருப்பமாகும். அதன் படி, சருமத்தை சுத்தம் செய்வது, டோனிங் மற்றும் ஈரப்பதமாக்குவது போன்றவற்றை தினமும் செய்து வருவது, சருமம் ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தின் pH அளவைப் பராமரிக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் ஸ்கின் டோனர் உதவுகிறது. இந்த ஸ்கின் டோனரை நம் வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம். இவை முற்றிலும் இயற்கையானதாகாவும், சருமத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த பதிவும் உதவலாம்: Eyebrow Thickening Tips: அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட அலோவேரா மற்றும் ரோஸ் டோனர்
அலோவேரா மற்றும் ரோஸ் டோனரை வீட்டிலேயே செய்யலாம். இந்த டோனரைப் பயன்படுத்துவது முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். இதற்கு கற்றாழை ஜெல் மற்றும் ரோஜா இதழ்கள் தேவைப்படுகிறது. இவை இரண்டும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
எனவே இந்த இரண்டு பொருள்களும் அழகுசாதனப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த டோனர் சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவற்றை வழங்குகிறது. இதில் வீட்டிலேயே டோனர் தயார் செய்யும் முறை குறித்துக் காணலாம்.
வீட்டிலேயே தோல் டோனர் செய்வது எப்படி?
இதில் எளிமையான முறையில் வீட்டிலேயே டோனர் தயார் செய்யும் முறை குறித்துக் காணலாம்.
தேவையானவை
- புதிய ரோஜா இதழ்கள்
- அலோவேரா ஜெல்
- ரோஜா அத்தியாவசிய எண்ணெய்
- டோனர் பாட்டில் அல்லது சிறிய கொள்கலன்
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Nail Care Tips: மழைக்காலத்துல நகப் பராமரிப்புக்கு இதெல்லாம் செய்யுங்க.
ஸ்கின் டோனர் செய்யும் முறை
- முதலில் இரண்டு கற்றாழை இலைகளை எடுத்துக் கொண்டு, அதன் ஜெல்லை பாத்திரம் ஒன்றில் பிரித்தெடுக்க வேண்டும்.
- பின், கற்றாழை ஜெல்லில் 4-5 சொட்டு ரோஸ் அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து மிக்ஸியில் கலக்கவும்.
- பிறகு, சில ரோஜா இலைகளை சுத்தம் செய்து, சிறிது தண்ணீரில் உடைத்து அதை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
- இப்போது அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் எண்ணெய் கலவையை சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்க வேண்டும்.
- இந்த கலவையை டோனர் பாட்டில் அல்லது சிறிய கொள்கலனில் சேமித்து வைத்து குளிர்சாதனபெட்டியில் வைக்க வேண்டும்.

டோனர் பயன்படுத்தும் முறை
காட்டன் பேட் ஒன்றைப் பயன்படுத்தி டோனரின் சில துளிகளை எடுத்து, அதை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக அப்ளை செய்ய வேண்டும்.
இந்த முறையை செய்து தயாரிக்கப்பட்ட ஸ்கின் டோனரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Beard Growth Oil: தாடி வேகமா வளர பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க.
Image Source: Freepik