Is It Safe To Eat Hibiscus Flowers: நாம் பலரும் செம்பருத்திப் பூக்களை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தில் பயன்படுத்தி வருகிறோம். செம்பருத்தி பூக்களை ஷாம்பு, கண்டிஷனர், பவுடர் என பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். ஆனால் செம்பருத்திப் பூக்களை நேரடியாக உட்கொள்வது பற்றி பலரும் அறியாத ஒன்றே. ஆம். செம்பருத்திப் பூக்களை உட்கொள்வதும் உடலில் பல்வேறு மாற்றங்களைத் தருகிறது.
செம்பருத்திப் பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பல்வேறு அதிசயக் கலவைகள் நிறைந்துள்ளது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் செம்பருத்தி பூவை உட்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Height Increasing Foods: உங்க உயரத்தை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்
செம்பருத்தி பூ உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
கொலஸ்ட்ரால் குறைய
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும் போது, தமனிகள் அடைபட்டு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். இதற்கு சிறந்த தேர்வாக செம்பருத்தி பூவை பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவின் சாற்றை வாய்வழியாக உட்கொள்ளும் போது, உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவு 22% வரை குறைக்கப்படுகிறது.
மேலும், இது உடலில் எச்டிஎல் என்ற நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இந்த செம்பருத்தி பூக்களில் உள்ள சபோனின்கள் கொலஸ்ட்ராலைப் பிணைத்து, உடல் கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இரத்த அழுத்தம் குறைய
செம்பருத்தி செடி சப்டாரிஃபா (Hibiscus sabdariffa) என்பது செம்பருத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட செடியாகும். இந்த செம்பருத்தி சப்டரிஃபா இனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் சிஸ்டாலிக் இரத்தத்தை 11.2% ஆக குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, டயஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை 10.7% ஆகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மிதமான உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் செம்பருத்தி பூவை உட்கொள்ளலாம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
உடல் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளது எனில், அது உடலில் அதிக நோயெதிர்ப்புச் சக்தி இருப்பதைக் குறிக்கிறது. அதன் படி, செம்பருத்திப் பூவின் சாறுகள், டி செல்கள் மற்றும் பி செல்களைத் தூண்டுகிறது. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் திறன் கொண்டுள்ளது. எனவே, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செம்பருத்தி பூக்கள் கொண்டு தயார் செய்யப்படும் செம்பருத்தி தேநீரை தினமும் ஒரு கப் அளவு அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cranberries Benefits: குருதிநெல்லியை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!
கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த
பொதுவாக செம்பருத்தி இலைகளை பல்வேறு வழிகளில் முடி பராமரிப்பில் பயன்படுத்தி வருகிறோம். செம்பருத்தி இலைகளை தலைக்கு பயன்படுத்துவது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பல்வேறு முடி பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாக அமைகிறது. செம்பருத்தி இலைகளை உட்கொண்டு வருவது இயற்கையான முடி வளர்ச்சிக்குக் காரணமாகலாம்.
நீரிழிவு நோய்க்கு
உயர் இரத்த சர்க்கரை அளவு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இது நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரை அளவு குறைய செம்பருத்தி பூ உதவுகிறது. தொடர்ந்து இருபத்தைந்து நாள்கள் செம்பருத்தி பூவின் சாற்றை வாய்வழியாக உட்கொள்வதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க முடியும்.
தோல் புற்றுநோயைத் தவிர்க்க
பல சமயங்களில் சூரியனின் புற ஊதா கதிர்களால், சருமத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், சில தீங்கு விளைவிக்கும் இராசயனங்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்தலாம். இதற்கு செம்பருத்திப் பூக்களைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது. அதன் படி செம்பருத்தி பூவை உட்கொள்வது பாதுகாப்பான விளைவை ஏற்படுத்துகிறது. புறஊதாக்கதிர்கள் வெளிப்படும் முன் செம்பருத்தி சாற்றை அவ்வப்போது பயன்படுத்துவது செல்லுலார் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
இவ்வாறு செம்பருத்தி பூவை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Saffron Milk Benefits: தினமும் குங்குமப்பூ பால் குடிப்பதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
Image Source: Freepik