Ginger oil for hair: முடிக்கு இந்த ஒரு எண்ணெயை யூஸ் பண்ணுங்க. வேணாம்னு சொல்ற அளவுக்கு முடி வளரும்

How to use ginger oil for hair growth overnight: தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். அதன் படி, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் எண்ணெய்களில் இஞ்சி எண்ணெய் பெரிதும் உதவுகிறது. இதில் தலைமுடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இஞ்சி எண்ணெய் தரும் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Ginger oil for hair: முடிக்கு இந்த ஒரு எண்ணெயை யூஸ் பண்ணுங்க. வேணாம்னு சொல்ற அளவுக்கு முடி வளரும்

Benefits of applying ginger oil on hair: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அதன் படி, முடி உதிர்வு, முடி வறட்சியடைதல், முடி உடைதல், நுனி முடி உடைதல் போன்ற முடி பிரச்சனைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் முடி சார்ந்த பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்துவர். இதற்கு சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்.

அந்த வகையில் தலைமுடிக்கு இயற்கையான வைத்தியமாக இஞ்சி பயன்படுத்தலாம். இது ஒரு அத்தியாவசிய சமையல் மூலப்பொருள் மட்டுமல்ல. எனவே இது முக்கியமான முடி பராமரிப்பு பொருளாகவும் பயன்படுகிறது. அந்த வகையில் கூந்தலுக்கு இஞ்சி எண்ணெயைப் பயன்படுத்துவது அழகான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவுகிறது. இஞ்சி சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் கொண்டதாகும். இஞ்சி கொண்டு தயார் செய்யப்படும் இஞ்சி எண்ணெயைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதில் தலைமுடிக்கு இஞ்சி எண்ணெய் பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla Hair Oil: இவ்ளோ சின்ன வயசுல நரைமுடியா? இந்த ஒரு ஆயில் போதும்!

இஞ்சி எண்ணெய்

இஞ்சி எண்ணெய் என்பது இஞ்சி வேரிலிருந்து தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அத்தியாவசிய எண்ணெயைக் குறிக்கிறது. இஞ்சி எண்ணெய் ஆனது முடி மற்றும் சருமம் இரண்டிற்குமே நன்மை பயக்கும். மேலும், இதன் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, பொதுவாக இது அரோமாதெரபி மற்றும் பிற சிகிச்சைப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடிக்கு இஞ்சி எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

தலைமுடிக்கு இஞ்சி எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஆய்வு ஒன்றி, இதை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது முடியின் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், இது மயிர்க்கால்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்குவதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இஞ்சி எண்ணெய் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கவும், வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

இஞ்சி எண்ணெய் ஜிஞ்சரால், ஷோகோல் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் வளமான மூலமாகும். ஆய்வு ஒன்றில், இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேற்றிகள் முடி மற்றும் உச்சந்தலையை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள், மயிர்க்கால்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துகிறது. இது முடி மெலிதல் மற்றும் முன்கூட்டிய நரைமுடிக்கு பங்களிக்கிறது. இஞ்சி எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை திறம்பட நடுநிலையாக்குகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து முடி மற்றும் உச்சந்தலையைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இவங்க எல்லாம் மறந்தும் ஹேர் ஆயில் பயன்படுத்தக்கூடாது; ஏன் தெரியுமா?

அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த

இஞ்சி எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இது கூந்தலுக்கு பெரிதும் உதவுகிறது. இதில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற பொருள்கள் உள்ளது. ஆய்வில், இந்த பொருள்கள் வீக்கமடைந்த உச்சந்தலையை திறம்பட அமைதிப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது பொடுகு போன்ற நிலைமைகளுக்கு உதவுகிறது. கூடுதலாக, இது வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், முடி வளர்ச்சி மற்றும் பொதுவான உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முடிக்கு ஊட்டமளிக்க

இஞ்சியில் முடி ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மதிப்பு மிக்க மூலமாகும். இது முடி மற்றும் உச்சந்தலை ஆகிய இரண்டிற்கும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இஞ்சியில் உள்ள ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை முடியின் தண்டை வலுப்படுத்தவும், அதன் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இதில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முடிக்கு இஞ்சி எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

தலைமுடிக்கு இஞ்சி எண்ணெயைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

இஞ்சி எண்ணெய் ஸ்கால்ப் மசாஜ்

  • இஞ்சி எண்ணெய் சில துளிகள் எடுத்துக் கொண்டு, அதை நேரடியாக உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • இதை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்து, பிறகு ஷாம்பு பயன்படுத்தி கழுவலாம்.
  • இது இரத்த ஓட்டத்தைத் தூண்டவும், மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வேர் வேரா முடி கொட்டுதா? வீட்டிலேயே தயார் செய்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க

இஞ்சி எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்

  • இந்த கலவையைத் தயார் செய்வதற்கு 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை 1 தேக்கரண்டி இஞ்சி எண்ணெயுடன் சேர்க்க வேண்டும்.
  • பிறகு இந்தக் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, முனைகளில் கவனம் செலுத்தலாம்.
  • இதை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்து, பிறகு கழுவலாம்.
  • இந்த சிகிச்சையானது முடியை மென்மையாக்கவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது.

இஞ்சி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

  • முதலில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி எண்ணெயுடன் கலக்க வேண்டும்.
  • பின் இந்தக் கலவையை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம். மேலும், முனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  • இதை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்து, பிறகு கழுவிக் கொள்ளலாம்.
  • இந்த ஹேர் மாஸ்க் ஆனது ஆழமான கண்டிஷனிங்கை வழங்குவதாகவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Oil for Shiny Hair: இந்த எண்ணெயை யூஸ் பண்ணா, முடி ஸ்ட்ராங்கா மட்டுமல்ல சைனிங்காவும் வளரும்!

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போகும்.. இதை தடுக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..

Disclaimer