இவங்க எல்லாம் மறந்தும் ஹேர் ஆயில் பயன்படுத்தக்கூடாது; ஏன் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
இவங்க எல்லாம் மறந்தும் ஹேர் ஆயில் பயன்படுத்தக்கூடாது; ஏன் தெரியுமா?


தற்போது முடி உதிர்வு என்பது இளைஞர்களிடையே காணக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்வதற்கும், மீண்டும் வளருவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆனால் சிலர், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், புதிய முடி வளரவும் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

நாம் உண்ணும் தவறான உணவு உட்பட பல காரணங்களால் இது ஏற்படலாம். இது தவிர காற்று மாசுபாடு, மன அழுத்தம், தைராய்டு, ஹார்மோன் மாறுபாடு மற்றும் சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என அனைத்தும் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

ஆனால் முடிக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதன் மூலமாக அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என நினைக்கிறோம். கூந்தலை பராமரிப்பதற்காக வாரந்தோறும் தவறாமல் எண்ணெய் குளியல் செய்பவர்களும் உண்டு. தலைக்கு எண்ணெய் தடவினால் முடி நன்றாக வளரும் என்பது முழுமையான உண்மையல்ல. இருப்பினும், தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தேவையில்லை என்றாலும், கூந்தலை வறட்சி இல்லாமல் பராமரிக்க இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தருணத்தில் நம் அனைவருக்கும் எழும் ஒருகேள்வி, யாரெல்லாம் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தலாம்?, பயன்படுத்தக்கூடாது? என்பது தான். இதுகுறித்து நிபுணர்கள் அளித்துள்ள விளக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

தலையில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்று, உச்சந்தலை வறண்டு போகாமல் இருப்பது. ஏனெனில் வறண்ட கூந்தல் உடைந்து நரைக்கும் வாய்ப்புள்ளது.

வறண்ட கூந்தல் இருந்தால், தினமும் சிறிது எண்ணெய்யை கண்டிஷனர் போல தடவலாம். பொதுவாக தினசரி எண்ணெய் தேய்ப்பது அவசியமில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

பொதுவாக எண்ணெயில் ஃபேட்டி ஆசிட்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் ஆகியவை உள்ளன. இதனால் பளபளப்போடு, முடியில் ஏற்படக்கூடிய நுனி பிளவு, உச்சந்தலை வறட்சி, பொலிவின்மை சரி செய்யப்படுகிறது.

எண்ணெய் தடவினால் இது கட்டாயம்:

ஷாம்பு கூந்தலுக்கு நல்லதல்ல என்ற கருத்தும் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஆனால், தினமும் கூந்தலுக்கு நிறைய எண்ணெய் தடவி வந்தால், ஷாம்பு போட்டு கழுவாமல் இருந்தால், தூசி மற்றும் அழுக்குகள் முடியில் ஒட்டிக்கொண்டு பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். மேலும் தலையில் ஏற்படக்கூடிய பொடுகு, பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கும் வழிவக்கும்.

எனவே தினமும் தலைக்கு எண்ணெய் தடவினால், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பது நல்லது. ஷாம்பை விரும்பாதவர்கள், அரப்பு, சீகக்காய், வெந்தயம், கற்றாழை போன்ற இயற்கை பொருட்களை முயற்சிக்கலாம்.

இவங்க எல்லாம் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது?

சிலருக்கு இயற்கையாகவே தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெய் வெளியாகும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தலைக்கு தினந்தோறும் எண்ணெய் தேய்க்கக்கூடாது.

அதேபோல் பொடுகு பிரச்சனை இருப்பவர்களும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது. ஏனெனில் எண்ணெய் காரணமாக பொடுகுத் துகள்கள் உச்சந்தலையிலும் முடியிலும் ஒட்டிக்கொள்கின்றன. எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில், பொடுகு குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கலாம். எண்ணெய், இறந்த சரும செல்கள் சேர்ந்து, உச்சந்தலையில் அழுக்கு மற்றும் அரிப்பு ஏற்படுத்தும்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆயில் மசாஜ் செய்து தலைக்கு குளிப்பது நல்லது. தோல் மருந்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கன்டிஷனர்கள் அல்லது இயற்கையான மூலிகை பொருட்களை பயன்படுத்துவது கூடுதல் பலனளிக்கக்கூடும்.

Image Source: Freepik

Read Next

Cinnamon For Hair: உங்களுக்கு கருகருன்னு நீளமான கூந்தல் வேண்டுமா? அப்போ இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்