How to prepare turmeric for hair growth: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளை மேற்கொள்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறு, முடி உதிர்வு, வறண்ட முடி, நரைமுடி மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். இது போன்ற முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட பலரும் இரசாயனங்கள் கலந்த பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது உண்மையில் வேறு சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.
இந்நிலையில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், முடி வலிமையை ஆதரிக்கவும் இயற்கையான தேர்வுகளைக் கையாள்வது நல்லது. அவ்வாறே, தலைமுடி ஆரோக்கியத்திற்கு மஞ்சள் பெரிதும் உதவுகிறது. இது இந்திய மருத்துவத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பல்துறை பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமம் மற்றும் முடி பராமரிப்பு உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறே, முடி வளர்ச்சிக்கு மஞ்சளைக் கொண்டு “மஞ்சள் ஷாட்” அல்லது “மஞ்சள் பானம்” தயார் செய்யலாம். இது முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Ginger oil for hair: முடிக்கு இந்த ஒரு எண்ணெயை யூஸ் பண்ணுங்க. வேணாம்னு சொல்ற அளவுக்கு முடி வளரும்
முடி வளர்ச்சிக்கு மஞ்சள் எவ்வாறு உதவுகிறது?
முடி வளர்ச்சியைத் தூண்ட மஞ்சள் ஷாட்டை எப்படி தயார் செய்வது என்று யோசிக்கும் முன்பாக, அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவை அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இது முடி ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மை பயக்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது.
உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இது எரிச்சலைக் குறைக்கவும், உச்சந்தலையில் ஏற்படும் தொற்றைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், முடியின் மயிர்க்கால்களை ஆரோக்கியமான சூழலில் உருவாக்குகிறது.
முடி வலிமை மற்றும் பளபளப்பை அதிகரிக்க
மஞ்சளின் வழக்கமான பயன்பாடுகள் முடியின் மயிர்க்கால்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது முடி உதிர்தல் மற்றும் முடி பிளவுபடுவதைத் தவிர்க்கிறது. இதன் மூலம் வலுவான ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெறலாம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு மஞ்சள் உதவுகிறது. இது முடியின் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், முடி ஆக்ஸிஜன் பெறுவதை உறுதி செய்கிறது.
முடி உதிர்வைத் தடுக்க
மஞ்சளானது உச்சந்தலையில் இயற்கையாகவே உற்பத்தியாகும் எண்ணெயான செபம் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த அதிகப்படியான செபம் உற்பத்தியானது துளைகளை அடைத்துவிடும். இதன் காரணமாக முடி உதிர்தல் ஏற்படுவதுடன், முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். இந்நிலையில் மஞ்சள் செபம் உற்பத்தியை சமநிலைப்படுத்தி, முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முடி கொட்டாது, நரைக்காது, வழுக்கைக்கு வாய்ப்பே இல்ல! ஒரே ஒரு ஜூஸ் போதும்..
பொடுகைக் குறைப்பதற்கு
பொதுவாக உச்சந்தலையில் காணப்படும் ஒரு நிலையே பொடுகு ஆகும். இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. மஞ்சளில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும், பொடுகை குறைக்கவும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட
மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் முடி முன்கூட்டியே வயதாவதற்கு வழிவகுக்கலாம். இதனால் முடி மந்தமாகவும், மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறலாம். இதற்கு மஞ்சள் ஒரு சிறந்த தேர்வாகும்.
முடி வளர்ச்சிக்கு மஞ்சள் ஷாட் தயார் செய்யும் முறை
தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு ஆரோக்கியமான பொருள்களைக் கொண்டு மஞ்சள் ஷாட் தயார் செய்யலாம்.
தேவையானவை
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
- வெதுவெதுப்பான நீர் அல்லது தேங்காய் பால் - தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Honey hair mask: முடி மென்மையா, பளபளபனு இருக்கணுமா? தேனுடன் இந்த பொருளைக் கலந்து யூஸ் பண்ணுங்க
மஞ்சள் ஷாட் தயாரிக்கும் முறை
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அல்லது தேங்காய் பாலை சூடாக்க வேண்டும். இது சூடாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கலவை கொதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகம் கொதிக்க வைப்பது அதன் ஊட்டச்சத்துக்களின் செயல்திறனைக் குறைக்கலாம்.
- பிறகு இந்த வெதுவெதுப்பான நீர் அல்லது தேங்காய் பாலில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இதில் மஞ்சள் நன்கு கரையுமாறு நன்கு கிளறலாம்.
- அதன் பின், ஒரு சிட்டிகை அளவிலான கருமிளகு சேர்க்கலாம். கருமிளகில் உள்ள பைபரின் குர்குமினின் உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. இது உடல் மஞ்சள் எளிதில் உறிஞ்சி பயன்படுவதை எளிதாக்குகிறது.
- கருமிளகு சேர்த்த பின், தேன் சேர்க்கலாம். தேன் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகும். இது முடி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சுவையாகவும், தொண்டையை ஆற்றவும் உதவுகிறது.
- பிறகு, இந்தக் கலவையில் புதிதாக பிழிந்த எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். இது சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் உடலை சுத்தப்படுத்தவும், உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
- இவை அனைத்தையும் நன்கு கலந்து, கலவை வெதுவெதுப்பாக இருக்கும் போதே அருந்தலாம்.
மஞ்சள் ஷாட்டை எப்படி உட்கொள்வது?
அதிகபட்ச நன்மைகளைப் பெற, இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். விருப்பத்தைப் பொறுத்து மாலையிலும் அருந்தலாம். மஞ்சள் பொதுவாக மக்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பினும், அதிக மஞ்சள் அல்லது குர்குமின் உட்கொள்வது சில நபர்களுக்கு செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, இதை எடுத்துக் கொள்ளும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Amla shots benefits: தினமும் வெறும் வயிற்றில் ஆம்லா ஷாட் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Image Source: Freepik