$
Night Time Asthma Causes And Symptoms: இன்று சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோயாக ஆஸ்துமா உள்ளது. ஆஸ்துமா ஆனது சுவாச அமைப்புடன் தொடர்புடைய ஒரு தீவிரமான நோயாகும். அசுத்தமான காற்றை சுவாசித்தல், மோசமான வாழ்க்கை முறை மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்களால் இந்த ஆபத்து அதிகரிக்கிறது. இந்நோயில் சுவாசிப்பதில் சிரமம் உண்டாகலாம்.
ஆஸ்துமாவில் பல வகைகள் உள்ளன. இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். குறிப்பாக இதில் இரவு நேர ஆஸ்துமாவும் அடங்கும். இந்த இரவு நேர ஆஸ்துமாவால் பலரும் பாதிப்படைகின்றனர். இதில் நோயாளி இரவில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த இரவு நேர ஆஸ்துமா நோயினால் நோயாளியின் நிலையானது இரவு பகலில் கூட மோசமாகவே உள்ளது. இரவு நேர ஆஸ்துமா ஒரு தீவிர நோயாகும். இதன் அறிகுறிகளைப் புறக்கணிப்பது நிலையை தீவிரமாக்கலாம். இதில் இரவு நேர ஆஸ்துமா குறித்தும், அதனைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள் குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tattoo Cause Cancer: பச்சை குத்துவதால் புற்றுநோய் வருமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
இரவு நேர ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமா நோயாளிகளுக்கு இரவு நேரங்களிலேயே ஆஸ்துமா தாக்குதலின் ஆபத்து அதிகமாக இருக்கும். இது குறித்து பாபு ஈஸ்வர் ஷரன் மருத்துவமனை முதுநிலை மருத்துவர் டாக்டர் சமீர் அவர்களின் கூற்றுப்படி, “இரவு நேர ஆஸ்துமா என்பது இரவுநேரத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்துமா ஆகும். இந்த இரவு நேர ஆஸ்துமாவால் நெஞ்சு இறுக்கம், தும்மல், சளி, இரவில் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழலாம். ஆஸ்துமா நோயாளிகளில் 60% பேர் இரவு நேர ஆஸ்துமாவால் பாதிப்படைகின்றனர். இந்நிலை புறக்கணிக்கப்பட்டால் மிகவும் தீவிரமானதாகவும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக முடியலாம்.” என்று கூறியுள்ளார்.

இரவு நேர ஆஸ்துமா (நாக்டர்னல்) ஏற்படுவதற்கான காரணங்கள்
இரவு நேரத்தில் ஏற்படும் இந்த ஆஸ்துமா பிரச்சனையானது பொதுவாக தூக்கத்தின் போது ஏற்படுகிறது. தூக்கமின்மை, தூங்கும் முறைகளில் தொந்தரவு, சுவாசம் தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சனை போன்ற காரணங்கள் போன்றவை இந்த இரவு நேர ஆஸ்துமாவிற்குக் காரணமாக இருக்கலாம். இதில் இரவு நேர ஆஸ்துமாவிற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.
- தவறான தூக்கநிலை
- ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
- படுக்கையில் தூசி இருப்பது
- ஒவ்வாமை
- உடல் பருமன்
- அறையில் காற்று மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை
இந்த பதிவும் உதவலாம்: Heatwaves: அதீத வெப்பம் உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? உங்கள் உடலை எவ்வாறு பராமரிப்பது?
இரவு நேர ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள்
இரவில் தூங்கும் போது ஏற்படும் இரவு நேர ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
- சுவாச பிரச்சனை
- பேசுவதில் சிரமம்
- கவலை மற்றும் அமைதியின்மை
- பல்வேறு தொற்று பிரச்சனைகள்
- வேகமான சுவாசம்
- மார்பு வலி
இரவு நேர ஆஸ்துமாவின் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்
- ஆஸ்துமா பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க முதலில் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கூறுகளைக் கவனிக்க வேண்டும்.
- இரவு நேர ஆஸ்துமா அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
- பரிசோதனைக்குப் பின் நோயாளியின் நிலையைப் பொறுத்து சிகிச்சை பெற வேண்டும்.
- இதில் சிலர் மருந்துகள் உட்கொள்ளலை அறிவுறுத்தப்படுகின்றனர்.
- மேலும், மருத்துவரை முன்னதாகவே அணுகுவதன் மூலம் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட வழிகளில் சிகிச்சையளிக்கலாம்.

இவ்வாறு இரவு நேர ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு நாக்டர்னல் (Nocturnal) ஆஸ்துமா ஏற்படுவதைத் தடுக்க முடியும். மேலும் இந்த வகை ஆஸ்துமாவைத் தவிர்க்க சரியான தூக்க நிலைப் பராமரிப்புடன், ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். இது தவிர, இரவுநேர ஆஸ்துமா அபாயத்தைத் தூண்டும் புகைபிடித்தல் அபாயத்தைத் தவிர்க்க வேண்டும். அதே போல, இரவில் தலையை உயர்த்தி தூங்குவதன் மூலம் இரவு நேர ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Disease: வாழைப்பழங்கள் மற்றும் உருளைக்கிழங்கு சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்குமா? டாக்டர் கூறுவது என்ன?
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version