World Asthma Day 2024: இதெல்லாம் தான் ஆஸ்துமா வர காரணம்! எப்படி தடுப்பது?

  • SHARE
  • FOLLOW
World Asthma Day 2024: இதெல்லாம் தான் ஆஸ்துமா வர காரணம்! எப்படி தடுப்பது?

ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அன்று உலக ஆஸ்துமா தினமாகக் கருதப்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளவில் ஆஸ்துமா பராமரிப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த 2024 ஆம் ஆண்டு உலக ஆஸ்துமா தினம் (World Asthma Day) மே 7 ஆம் தேதி வருகிறது. இதில் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World Laughter Day 2024: வாய்விட்டு சிரிப்பது உண்மையில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

ஆஸ்துமா ஏற்பட காரணங்கள் என்னென்ன தெரியுமா?

ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்பட காரணங்கள் ஏராளம். இதில் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணிகள் சிலவற்றைக் காணலாம்.

ஒவ்வாமை

சிலர் அதிகளவில் ஒவ்வாமை பிரச்சனையால் பாதிக்கப்படுவர். குறிப்பாக, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதிலும், இவர்களின் பெற்றோரில் ஒருவருக்கு ஒவ்வாமை இருப்பின், அதாவது ஒவ்வாமை நாசியழற்சி (வைக்கோல் காய்ச்சல்) அல்லது அடோபிக் டெர்மடிடிஸ் (அரிக்கும் தோலழற்சி) போன்ற சில நிலைகள் ஆஸ்துமாவைப் பெறுபவர்களுக்கு தொடர்புடையவை ஆகும்.

காற்று மாசுபாடு

புகை மூட்டத்தின் முக்கிய கூறுகளின் வெளிப்பாடானது ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கக் காரணமாகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் அல்லது புகை மூட்டத்தில் வளர்பவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக உடல் எடை

அதிக பருமன் கொண்ட குழந்தைகள், பெரியவர்கள் போன்றோர்களுக்கு ஆஸ்துமா அபாயம் ஏற்படலாம். இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை எனினும் சில நிபுணர்கள், கூடுதல் எடையுடன் ஏற்படும் உடலில் குறைந்த தர வீக்கமானது அஸ்துமா ஏற்படுவதைக் குறிக்கிறது. அதிலும் உடல் பருமன் கொண்டவர்கள் பெரும்பாலும் அதிக மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இவர்கள் மோசமான அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். அதன் படி, அதிக ஆரோக்கியமான எடை கொண்டவர்களைக் காட்டிலும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக உள்ளது.

புகைபிடித்தல்

புகைபிடிப்பது சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதிலும், கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் புகைபிடித்தவர்கள் அல்லது புகைபிடிப்பவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதில் ஆஸ்துமாவுடன் புகைபிடிப்பதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World Asthma Day 2024: உலக ஆஸ்துமா தினத்தின் வரலாறு, தீம் மற்றும் முக்கியத்துவம்…

வைரஸ் தொற்றுக்கள்

இன்று பலரும் குழந்தை பருவத்திலிருந்தே சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதில் வைரஸ் சுவாச நோய்த்தொற்றுக்களை அனுபவிக்கக் கூடிய சில குழந்தைகள் நாள்பட்ட ஆஸ்துமா பிரச்சனையை சந்திக்கின்றனர்.

குடும்ப வரலாறு

ஆஸ்துமா உள்ள பெற்றோர் இல்லாத ஒருவருடன் ஒப்பிடுகையில் ஆஸ்துமா உள்ள பெற்றோர் உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று முதல் ஆறு மடங்கு வரை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொழில்சார் வெளிப்பாடுகள்

ஆஸ்துமா உள்ள ஒருவருக்கு பணியிடத்தில் உள்ள சில கூறுகளின் வெளிப்பாடு காரணமாகவும் ஆஸ்துமா அறிகுறிகள் அதிகமாகலாம். இது தவிர, சில தூசிகள், இரசாயனப் புகைகள், நீராவிகள் போன்றவற்றின் வெளிப்பாட்டால் ஆஸ்துமா உருவாகலாம்.

ஆஸ்துமா ஏற்படுவதைத் தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காரணிகளைத் தவிர்ப்பதைத் தவிர, வேறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

தூண்டுதல்களைத் தவிர்ப்பது

இது ஆஸ்துமா அறிகுறிகளைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதில் மோசமாக்கும் தூண்டுதல்களைக் கண்டறிந்து தவிர்ப்பது அவசியமாகும். இதன் பொதுவான தூண்டுதல்களில் தூசிப் பூச்சிகள், புகை, காற்று மாசுபாடு மற்றும் இன்னும் சில உணவுகள் அடங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: AC Side Effects: அதிகநேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.. ஏசி பாதுகாப்பு வழிகள்!

உடற்பயிற்சி செய்வது

நுரையீரல் திறனை வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு உடற்பயிற்சியின் போது ஆஸ்துமா ஏற்படலாம். இது உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட மூச்சுக்குழாய் சுருக்கம் என அழைக்கப்படுகிறது. நடைபயிற்சி, நீச்சல் அல்லது பைக்கிங் போன்ற ஆஸ்துமாவைத் தூண்டாத உடற்பயிற்சிகளுடன் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்து

இந்த முறையில் நீண்ட கால கட்டுப்பாடு மற்றும் விரைவான நிவாரண மருந்துகள் போன்றவை அடங்கும். இதில், மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அல்லது டோஸ்களைத் தவிர்ப்பது போன்றவை மோசமான அறிகுறிகள் மற்றும் ஆஸ்துமா தாக்குதல்களை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

மன அழுத்தத்தால் ஆஸ்துமா அறிகுறிகள் தூண்டப்படலாம். யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களின் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த முயற்சிகளைக் கையாள்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Zinc for Asthma: துத்தநாகம் நிறைந்த உணவுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

World Asthma Day 2024: உலக ஆஸ்துமா தினத்தின் வரலாறு, தீம் மற்றும் முக்கியத்துவம்…

Disclaimer