World Sleep Day 2024: நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தினமும் இதெல்லாம் கட்டாயம் செய்யணும்

  • SHARE
  • FOLLOW
World Sleep Day 2024: நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தினமும் இதெல்லாம் கட்டாயம் செய்யணும்

ஆனால், சரியான தூக்கமின்மையால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு மற்றும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதே தூக்கமாகும். தூக்கத்தின் அளவுடன், தூக்கத்தின் தரமும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள்

வழக்கமான உறக்க நேரம்

தினந்தோறும் வழக்கமான உறக்க நேரத்தைக் கையாள வேண்டும். சரியான நேரத்தில் உறங்கி எழுவதை வழக்கமாக கொண்டிருக்கும் போது சீரான தூக்கத்தைப் பெறலாம். வார இறுதி நாள்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

பகல் உறக்கம்

இரவு தூக்கம் சரியாக இருக்கும் போதோ, இல்லாத போதோ, பல்வேறு காரணங்களால் பலரும் பகலில் சோர்வை உணர்வர். எனவே பகல் நேரத்தில் சிறிய நேரமாக 20 முதல் 30 நிமிடங்கள் தூங்குவது இரவு நேர தூக்கத்தில் குறுக்கிடாமல் இருக்க உதவும். மேலும் இது சீரான மற்றும் விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. எனினும், இரவு தூக்கத்தை சீராக வைக்க பகலில் நீண்ட தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

லாவண்டர் பயன்பாடு

தூங்கும் அறையில் லாவண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் பரப்புவது அல்லது தலையணையில் சில துளிகளைச் சேர்க்கலாம். ஏனெனில், லாவண்டரின் அமைதியான பண்புகள் சிறந்த தூக்கம் மற்றும் இனிமையான வாசனையை அளிக்கிறது.

இரவு நேர சிற்றுண்டிகளைத் தவிர்ப்பது

கனமான அல்லது காரமான உணவுகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் லேசான சிற்றுண்டி தேவைப்படுமாயின் ஓட்ஸ், வெண்ணெய் போன்ற தூக்கத்திற்கு ஏற்ற சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யலாம்.

திரை நேரத்தை வரம்பிடுதல்

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே, கணினிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இது நீல ஒளி வெளிப்பாட்டைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stress Increasing Habits: மன அழுத்தத்தை அதிகரிக்கும் இந்த கெட்ட பழக்கங்களை உடனே கைவிடுங்க

உடற்பயிற்சி செய்வது

வழக்கமான உடற்பயிற்சி தூக்கத்தின் தரம் மற்றும் நேரத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, இரவில் உறங்கும் முன் தீவிர உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்வது, அட்ரீனல் அளவை அதிகரித்து ஓய்வெடுப்பதை சவாலாக்குகிறது.

மென்மையான நீட்சியில் ஈடுபடுதல்

மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். மாலைப் பொழுதில் மென்மையான நீட்சி, யோகா போன்றவற்றைச் சேர்ப்பது பதற்றத்தை விடுவிப்பதுடன், தளர்வை ஊக்குவிக்கிறது.

தூக்க சூழலை மேம்படுத்துவது

தலையணைகள், மெத்தை போன்ற போதுமான ஆதரவு மற்றும் சௌகரியத்தை வழங்கும் கரணிகள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், ஈரப்பதத்தை உறிஞ்சும் படுக்கையாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

தூக்கம் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல தரத்துடன் கூடிய தேவைப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Overthinking Control Tips: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் அதீத சிந்தனை. இதை எப்படி தவிர்ப்பது?

Image Source: Freepik

Read Next

Meena Sankranti 2024: ஆன்மீகம் மட்டுமல்ல. உடல், மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் மீனா சங்கராந்தி

Disclaimer