Bad Habits That Cause Stress: இன்றைய காலகட்டத்தில் நவீன வாழ்க்கை முறை நாள்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உடல் செயல்பாட்டில் ஈடுபடாமல் இருப்பது, வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அலுவலக இலக்குகள், குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு போன்றவை அதீத மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.
இவ்வாறு பல்வேறு காரணங்களால் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பல்வேறு வகையான மன நோய்களை ஏற்படலாம். இதில் சுகூன் சைக்கோதரபி மையத்தின் நிறுவனர், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியலாளர் தீபாலி பேடி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Care Tips: அதிக திரை நேரத்தினால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கெட்ட பழக்கங்கள்
மோசமான தூக்க பழக்கம்
இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் ஓய்வின்றி வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும் இரவில் கண் விழித்து வேலை பார்ப்பது, இரவு நேரங்களில் அதிகம் திரையைப் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இரவில் தூங்கி, பகலில் விழித்திருப்பது இயற்கையான விதியாகும். ஆனால், இந்த மோசமான பழக்க வழக்கங்களால் மன அழுத்தம் அதிகமாகலாம். மோசமான தூக்கப் பழக்கம், மன அழுத்தம் கணிசமாக அதிகரிக்கும்.
சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல்
சமூக வலைதளங்களில் இரவு பகல் பாராமல் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. எனினும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவரே அதிகம் உள்ளனர். அதே சமயம் சுற்றியுள்ளவர்களுடனான தொடர்பு குறைவாக இருக்கும். எனவே, திரை நேரத்தைக் குறைத்து, நடைபயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: எந்த நிலையிலும் மனம் தளராமல் மனதை வலிமையாக வைக்க இத ஃபாலோப் பண்ணுங்க
போதைக்கு அடிமையாகுதல்
போதைப்பொருள் உட்கொள்பவர்கள், குறிப்பாஅ புகைபிடிப்பவர்கள் பெரும்பாலும் அதிகளவு மன அழுத்தத்தைக் கொண்டிருப்பர். எனினும், புகைபிடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என மக்கள் பலரும் நம்புகின்றனர். உண்மையில் இது பதற்றத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் நுகர்வு காலப்போக்கில் அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும்.
அதிக நேரம் உட்கார்ந்திருப்பது
தற்போது பெரும்பாலான மக்கள் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கின்றனர். பணியைப் பொறுத்த வரை இது நல்ல விஷயமாக இருப்பினும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கலாம். நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்காருவது ஒரே மாதிரியாக வேலை செய்வது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஓரிடத்தில் அதிக நேரம் உட்காரக் கூடாது.
இந்த கெட்ட பழக்கங்கள் அனைத்தும் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே இந்த பழக்கங்களைத் தவிர்த்து, நல்ல மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Overthinking Control Tips: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் அதீத சிந்தனை. இதை எப்படி தவிர்ப்பது?
Image Source: Freepik