Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Doctor Verified

உங்களுக்குத் தெரியாமலேயே சுகர் லெவலை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கங்கள்.. உடனே நிறுத்துங்க! மருத்துவர் சொன்னது

அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்கள் நம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இதில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய பழக்கங்கள் சிலவற்றைக் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் நீரிழிவு நோயும் அடங்குகிறது. நீரிழிவு நோய்க்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் இருக்கலாம். ஆனால், சில ஆரோக்கியமற்ற பழக்கங்களை கடைப்பிடிப்பதும் இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். உண்மையில் நாம் அன்றாடம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். இது குறித்து மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் பழக்கங்கள்

மருத்துவரின் கூற்றுப்படி, “நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? சுத்தமாக சாப்பிடுகிறீர்கள், சர்க்கரையைக் குறைக்கிறீர்கள், ஆனாலும் உங்கள் இரத்த சர்க்கரை இன்னும் அதிகமாகவே உள்ளது? உண்மை என்னவென்றால், நீங்கள் சாப்பிடுவது மட்டுமல்ல... நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்வதும் இதுதான். உங்கள் இரத்த சர்க்கரையை அமைதியாக உயர்த்தும் 5 சிறிய விஷயங்கள் இங்கே” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவல் அதிகரிக்காம இருக்க உணவுக்கு முன் சூப் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்

- நாள்பட்ட மன அழுத்தம்

- தொடர்ந்து சிற்றுண்டி சாப்பிடுதல்

- இரவு நேர திரை நேரம்

- மிக வேகமாக சாப்பிடுதல்

- உணவுக்குப் பிறகு உட்கார்ந்திருத்தல்

இது கடுமையான உணவு முறைகள் அல்லது மாத்திரைகள் பற்றியது அல்ல. இது உங்கள் வளர்சிதை மாற்ற மூல காரணத்தை சரிசெய்வது பற்றியது.

நாள்பட்ட மன அழுத்தம்

இன்றைய காலத்தில் பலரும் தொடர்ந்து நாள்பட்ட மன அழுத்தம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கப்பட்டு, அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க சமிக்ஞை செய்கிறது. இவ்வாறு நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

அதிகளவு சிற்றுண்டி உட்கொள்வது

ஒவ்வொரு நாளும் தினந்தோறும் அதிகளவிலான சிற்றுண்டி எடுத்துக் கொள்வது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது, ஒவ்வொரு சிறிய கடியும், நாள் முழுவதும் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில், உங்கள் கணையம் ஒருபோதும் ஓய்வெடுக்காது. இதன் காரணமாக, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கலாம்.

இரவு நேர திரை நேரம்

இன்று பலரும் மொபைல் போன், தொலைக்காட்சி போன்ற திரை பயன்பாட்டின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், இவ்வாறு நீல நிற ஒளியானது தூக்க ஹார்மோன்களை தாமதப்படுத்தலாம். இந்த மோசமான தூக்கத்தின் காரணமாக, மறுநாள் காலையில் அதிக உண்ணாவிரத சர்க்கரைக்கு வழிவகுக்கிறது. எனவே, நல்ல இரவு நேர தூக்கத்தைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க நீங்க சாப்பிடக்கூடிய, சாப்பிடக் கூடாத உணவுகள்.. உங்களுக்கான சிம்பிள் டயட் பிளான்

மிக வேகமாக சாப்பிடுவது

மெதுவாக உணவு உட்கொள்ளாமல், வேகமாக சாப்பிடுவது, வேகமாக குளுக்கோஸ் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இதனால், முழுமையின் அறிகுறிகளை இழந்து இன்சுலின் அதிகமாக வேலை செய்கிறது. எனவே, வேகமாக உணவு உட்கொள்ளாமல், மெதுவாக சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

உணவுக்குப் பிறகு உட்கார்ந்திருப்பது

உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு உயர்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில், உணவு உண்ட பிறகு 10 நிமிடங்கள் அசைவதால் சர்க்கரை அளவு 30% குறைவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் மணிக்கணக்கில் அதிகமாக இருக்கும். எனவே, உணவுக்குப் பின் உட்கார்ந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும், உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய பழக்கங்கள் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையென்பதைக் காட்டும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.!

Image Source: Freepik

Read Next

உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையென்பதைக் காட்டும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 12, 2025 20:48 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content