
பலரும் ரத்த சர்க்கரை பரிசோதனை ரிப்போர்ட்டில் “நார்மல்” என வந்தால் தாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்று நம்புகிறார்கள். ஆனால் காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் பால், “சில நேரங்களில் ரிப்போர்ட் சாதாரணமாக இருந்தாலும், உடல் ரத்த சர்க்கரை சமநிலை குலைந்திருப்பதைத் தன்னுடைய சிக்னல்களால் தெரிவிக்கும். அவற்றை புறக்கணித்தால் இன்சுலின் எதிர்ப்பு அல்லது சர்க்கரை நோயின் தொடக்கநிலைக்கே தள்ளப்பட வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கிறார்.
முக்கியமான குறிப்புகள்:-
அந்த 5 முக்கிய அறிகுறிகள் இங்கே
தூக்கமெடுத்து எழுந்தாலும் சோர்வாக இருக்கிறீர்களா?
நீண்ட நேரம் தூங்கியும் காலை எழும்போது சோர்வாக உணர்கிறீர்களா? இது சாதாரணம் அல்ல. இது ரத்த சர்க்கரையின் ஏற்றத்தாழ்வால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு உருவாகும் அறிகுறி. செல்களில் சரியான எரிசக்தி சேராததால் உடல் முழுவதும் தளர்ச்சியாகி விடுகிறது.
உணவுக்குப் பிறகு இனிப்பு ஆசை வருகிறதா?
உணவு முடிந்தவுடன் இனிப்பு தேடுவது ஒரு ‘மனசுக்குப் பிடித்த’ பழக்கம் அல்ல — அது உங்கள் உடல் அனுப்பும் அபாயச் சிக்னல்! இது உணவுக்குப் பிறகு சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உடல் சிரமப்படுவதை குறிக்கிறது.
மூளை மங்கல் (Brain Fog) மற்றும் கவனம் சிதறுதல்
சில நாட்களாக அடிக்கடி மனதில் மங்கலாகவோ, நினைவாற்றல் குறைவாகவோ உணர்கிறீர்களா? இது மூளைக்குச் செல்லும் குளுக்கோஸ் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கலாம். இதுவே மெட்டபாலிக் சுகாதாரத்தில் குறைவு தொடங்கும் ஆரம்ப நிலை என்கிறார் டாக்டர் பால்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது / தாகம் அதிகரிப்பு
இரவில் இரண்டு முறை அல்லது அதற்கு மேல் சிறுநீர் கழிப்பது, தாகம் அதிகரித்தல், தூக்கம் குலைவது ஆகியவை உடல் கூடுதல் குளுக்கோஸை வெளியேற்றும் முயற்சி. இது நீண்டகாலத்தில் தூக்கத்தையும் உடல் மீள்திறனையும் பாதிக்கும் முக்கிய காரணமாகும்.
காயங்கள் ஆறாமல் போவது / கருமை புள்ளிகள் தோன்றுவது
சிறிய காயங்களுக்குப் பெரிதாக ஆற நேரமா எடுக்கிறது? கழுத்து, கைமடி, தொடை போன்ற இடங்களில் கருப்பு புள்ளிகள் தோன்றுகிறதா? இவை எல்லாம் இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) உருவாகியிருப்பதற்கான தெளிவான அறிகுறிகள். அதேபோல் அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்படுவதும் இதற்கே அடையாளம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் NIDDK பரிந்துரைத்த ABCS முறை
அமெரிக்க தேசிய நீரிழிவு மற்றும் சிறுநீரக நிறுவனம் (NIDDK) கூறும் ABCS முறை சர்க்கரை நோயைத் தடுக்கும் அடிப்படை வழிமுறையாகும்:
A — A1C Test
இந்த பரிசோதனை மூன்று மாத சராசரி ரத்த சர்க்கரை அளவை வெளிப்படுத்துகிறது. பொதுவாக 7% க்குக் குறைவாக இருக்க வேண்டும், ஆனால் தனிநபரின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
B — Blood Pressure
உயர் இரத்த அழுத்தம் இதயத்தையும், மூளையையும், சிறுநீரகத்தையும் பாதிக்கும். எனவே BP-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.
C — Cholesterol
அதிக கொழுப்புச் சத்து ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சிலருக்கு statin வகை மருந்துகள் தேவைப்படலாம்.
S — Stop Smoking
சிகரெட் மற்றும் வேப்பிங் இரண்டும் இரத்த நாளங்களைச் சுருக்கி, சர்க்கரை நோயின் தாக்கத்தை இரட்டிப்பு அளவில் அதிகரிக்கும்.
உணவு, உடற்பயிற்சி, தூக்கம் — மூன்று கோல்ட்ன் சட்டங்கள்
* சமநிலையான உணவு: நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
* உடற்பயிற்சி: வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் brisk walking அல்லது யோகா செய்யவும்.
* எடை கட்டுப்பாடு: மருத்துவரின் ஆலோசனைப்படி எடை குறைத்தல்.
* தூக்கம் & மனஅழுத்தம்: தினமும் 7–8 மணி நேரம் தூங்கவும்; தியானம், மூச்சி பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யவும்.
இறுதியாக..
இரத்த சர்க்கரை அளவு சரியாக இருந்தாலும், உடல் தானாகவே சில எச்சரிக்கை சிக்னல்களை அளிக்கும். அவற்றை கவனிக்காதால் இன்சுலின் எதிர்ப்பு உருவாகி, சர்க்கரை நோயை ஏற்படுத்தும் அபாயம் உயரும். உடல் சொல்கிற சைகைகளை கேளுங்கள் – அதுவே நம்மை காப்பாற்றும் முதல் மருந்து!
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனையாகாது. இது பொதுவான ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக மட்டுமே. ரத்த சர்க்கரை அல்லது இன்சுலின் பிரச்சனை இருந்தால் தகுதியான மருத்துவரின் ஆலோசனையைக் கடைபிடிக்கவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 11, 2025 23:08 IST
Published By : Ishvarya Gurumurthy