Ways To Control Overthinking At Night: இரவு தூக்கம் என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், இன்று பலரும் இரவு வேலை, மொபைல் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரவு தூக்கத்தை இழக்கின்றனர். இதில் முக்கியமானதாக இரவில் அதிகம் சிந்திப்பதும் அமையும். அதிகமாக சிந்திப்பது என்பது அனைவரும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இது தூக்க பாதிப்பு மற்றும் பசியின்மையை ஏற்படுத்தலாம்.
இரவில் அதிகம் யோசிப்பவர்கள் உணவுக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். இதனால், சர்க்கரை நோய், தைராய்டு, உடல் பருமன்,போன்ற விளைவுகள் ஏற்படலாம். இந்த நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, அதிகமாக சிந்திப்பதைத் தவிர்ப்பது அவசியம் ஆகும். மிகையாகச் சிந்திப்பதைத் தவிர்க்க உதவும் சில எளிய குறிப்புகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
அதிகப்படியான சிந்தனையை தவிர்க்க பின்பற்ற வேண்டிய குறிப்புகள்
நல்ல இரவு தூக்கத்திற்கு அதிகப்படியான சிந்தனையைத் தவிர்ப்பது முக்கியம் ஆகும். இந்த அதீத சிந்தனையைத் தவிர்க்க ஒருவர் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Illness Symptoms: இந்த அறிகுறிகளை சாதாரணமா நினைக்காதீங்க. இதெல்லாம் இருந்தா மனநோய் இருக்குனு அர்த்தமாம்
நல்ல இசை கேட்பது
நிம்மதியான தூக்கத்தை விரும்புபவர்கள், தூங்கும் முன் நல்ல இசையைக் கேட்கலாம். இரவில் லேசான இசையைக் கேட்டு தூங்குவது மனதை அமைதி பெற வைக்கும். இது குறித்து சில மருத்துவர்களும், மன அழுத்தத்தைப் போக்க மியூசிக் தெரபி பரிந்துரைக்கின்றனர். இரவு நேரத்தில் வரும் அதிகப்படியான யோசனையைத் தவிர்க்க, அரை மணி நேரம் இசையைக் கேட்கலாம். பாடல்கள் கேட்டு தூங்குவது நல்ல உறக்கத்தைத் தருவதற்கும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது.
நல்ல சூழலை உருவாக்குதல்
தூங்கும் முன் அதிகம் சிந்திப்பதற்கு சுற்றுப்புறச் சூழல் அமைதியாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். எனவே நல்ல மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெற விரும்புபவர்கள் நல்ல தூக்க சூழலை உருவாக்க வேண்டும். சத்தம் வராமல், மங்கும் விளக்குடன், தூங்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அறையில் வெளிர் வண்ண திரைச்சீலைகள் மற்றும் பெட்ஷீட்களப் பயன்படுத்தலாம். நல்ல சுற்றுப்புறச்சூழல் விரைவில் உறக்கத்தைத் தருகிறது. இது அதிக சிந்தனையைத் தடுக்கிறது.
எதிர்மறை சிந்தனைகளை நினைவில் கொள்ளாதிருப்பது
இரவு தூங்கும் முன் பலரும் நேர்மறை விஷயங்களை விட எதிர்மறை விஷயங்களை நினைத்துக் கொண்டிருப்பர். ஆனால் இவ்வாறு செய்தல் கூடாது. இது ஒருவரை கவலையில் தள்ளி தூக்கமின்மையை உண்டாக்கலாம். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது, மற்ற சில வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம் அல்லது வேறு ஒருவரிடம் பேசலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?
இரவில் நடப்பது
அதிக சிந்தனையைத் தவிர்க்க, இரவில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இரவில் தூங்கும் முன் நடப்பது மனதை அமைதியாக வைக்க உதவும். மேலும், நடைபயிற்சி உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்கி, மன அழுத்தத்தின் அறிகுறியை நீக்குகிறது. இரவில் தூங்க முடியாதவர்கள், சிறிது நேரம் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். நடைபயிற்சி களைப்பை உண்டாக்கும். பிறகு நிம்மதியாக உறங்கலாம்.
கருத்துகளைப் பகிர்தல்
அதிக சிந்தனையைத் தவிர்க்க, உங்களது எண்ணங்களை ஒருவருடன் பகிர்ந்து கொள்ளலாம். பல சமயங்களில் தேவையற்ற எண்ணங்களில் நேரத்தை வீணடித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் பேசுகையில், மனதில் எழும் கேள்விகள் ஒரு முடிவுக்கு வரலாம். இது அதீத சிந்தனையைத் தவிர்ப்பதற்கு சிறந்த மற்றும் எளிதான வழியாகும். அதிகம் சிந்திப்பவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகி தூக்கத்தைப் பாதிக்கும்.
இந்த குறிப்புகளைக் கடைபிடிப்பதன் மூலம் இரவில் தூங்கும் முன் ஏற்படும் அதிக சிந்தனை பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!
Image Source: Freepik