$
Warning Signs Of Mental Health Disorders: உடல் நலத்தைப் பேணிக்காப்பது போல, மனநலத்தைப் பேணிக்காப்பதும் முக்கியமானதாகும். எனவெ, மனநோய் குறித்த புரிதல் இருப்பது மிக அவசியமான ஒன்று. இது பொதுவான பிரச்சனையாக இருப்பினும், இதன் சாத்தியமான அறிகுறிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். கவலை, குற்ற உணர்வு, மனச்சோர்வு, பயனற்ற அல்லது மிகைப்படுத்தப்பட்ட உயர்ந்த உணர்வு போன்றவை மனநலப் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். அதே சமயம், வாழ்க்கை முறையில் சந்திக்கும் சில மாற்றங்கள், தூக்கம், எடை, தனிப்பட்ட சுகாதாரம் போன்ற எண்ணற்ற காரணிகளும் மனநோய்க்கு காரணிகளாக விளங்குகின்றன.
மனநிலை பிரச்சனையை எவ்வாறு கண்டறிவது
ஒருவருக்கு மனநலப் பிரச்சனை இருப்பதை அவர்களின் நண்பர், குடும்ப உறுப்பினர் போன்றோர் கண்டறிவது மிக முக்கியம். இதில், ஒரு நபரின் சிந்தனை, நடத்தை, உணர்வுகள் போன்ற நுட்பமான மாற்றங்களால் மனநலக் கோளாறு ஆரம்பிக்கும். இதனைத் தொடர்ந்து, அவர்களின் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பின், அது மனநலக் கோளாறை உருவாக்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இங்கு மனநோய் இருப்பதற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

மனநலப் பிரச்சனையின் அறிகுறிகள்
இந்த அறிகுறிகளில் சில கடுமையான பிரச்சனைகள் ஏற்படாது. எனினும், இது நாள்பட்ட அறிகுறிகளாகத் தொடர்ந்தால், உதவியை நாடுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்
கவலை உணர்வு
அன்றாட வாழ்க்கையில் எழும் சிறிய மற்றும் பெரிய விஷயங்களுக்கு, மக்கள் அவ்வப்போது கவலை அல்லது மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். வழக்கமான நடவடிக்கைகளில் இந்த கவலை நிலையானது இருக்கும் போது மனநலக் கோளாறை ஏற்படுத்தலாம். கவலை இருக்கும் போது மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், இதயத்துடிப்பு, தலைவலி, நடுக்கம், வியர்த்தல், அமைதியின்மை உள்ளிட்டவை ஏற்படலாம்.
மனநிலை மாற்றங்கள்
ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மனநிலைகளுடன் காணப்படுவர். ஆனால், தீவிர மன உளைச்சல் அல்லது கோபம் போன்ற திடீர் மாற்றங்கள் மனநோய் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

எடை அல்லது பசியின்மை மாற்றங்கள்
சிலர் வழக்கத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது எடை அதிகரிப்பு அல்லது விரைவான எடை இழப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது மனநலக் கோளாறின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
வழக்கத்தை விட அமைதியாக இருப்பது
வழக்கமான ஆளுமையில் இருந்து விலகுவது போன்ற பெரிய மாற்றங்கள் இருந்தால், அது மனநலக் கோளாறைக் குறிக்கலாம். இதில் ஒருவர் அவரது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, சமூக நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்தால், அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தூக்க பிரச்சனைகள்
ஒருவரின் தூக்க முறையில் ஏற்படும் மாற்றங்களும் மனநல நோய் இருப்பதைக் குறிக்கும். இதில் தூக்கமின்மை அல்லது அதிகமாக தூங்குவது அடங்கும். மனநோய் இருப்பவர்களில் சிலர் பகல் முழுவதும் தூங்கு இரவு முழுவதும் விழித்திருப்பார்கள்.

குற்ற உணர்வு
இது என் தவறு, நான் மதிப்பற்றவன், நான் தோல்வியடைந்தேன் இது போன்ற எண்ணற்ற காரணங்கள் ஒருவர் மனதில் எழும் போது அவருக்கு மனநலக் கோளாறு இருப்பதைக் குறிக்கிறது. இதிலிருந்து மீள ஒருவர் மன தைரியத்துடன் போராடுவது நல்லது.
இந்த அனைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு மனநல நோய் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!
Image Source: Freepik
Read Next
World Smile Day: அதிகமாக சிரிச்சா நம் ஆயுள் அதிகரிக்குமாம். சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version