National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்

  • SHARE
  • FOLLOW
National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்


சோம்பல் என்றால் என்ன?

எந்த கவலையும், சிந்தனையும் இல்லாமல், தூக்கத்திலேயே பாதி நேரத்தைக் கழித்து சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாகவே சோம்பேறிகள் இருப்பர். அதிலும் கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். நம் ஆற்றலை மழுங்கடையச் செய்யும் செயலே சோம்பேறித்தனம் எனப்படுகிறது. இதை ஒரு வியாதியாகக் கருத முடியாது. ஆனால், சோம்பேறித் தனத்தை சில எளிய வழிகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் ஆற்றலை புதுப்பிக்க முடியும். சோம்பலை முறியடிக்க செய்ய வேண்டிய சில வழிகளைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சோம்பலை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய வழிகள்

சோம்பேறித்தனத்தை வெல்வது என்பது நாம் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சாத்தியமாகும். இதில், எந்தெந்த வழிகளைக் கையாள்வது என்பதைப் பார்ப்போம்.

உடற்பயிற்சி செய்தல்

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் புத்துணர்ச்சி அடையும். இது நாள் முழுவதும் ஆற்றலைத் தரும். மேலும் இது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மனதில் உறுதி பிறப்பதுடன், அதிக நம்பிக்கையுடன் காணப்படுவர். சோம்பலைப் போக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு எளிமையான முயற்சியாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?

குறைவான முடிவுகளை எடுத்தல்

பல்வேறு விஷயங்களுக்கு ஒவ்வொரு முறை முடிவெடுக்கும் போது, ஆற்றல் விளைவைத் தருகிறது. அதிகமான முடிவுகளை எடுக்கும் போது, அது தீர்க்கப்படாத தீர்மானங்களாக இருந்தால் மன உறுதி குறைந்து விடும். இந்த சூழ்நிலையே ஒருவரை சோம்பேறியாக மாற்றுகிறது. எனவே மன உறுதியுடன் செயல்படுவதற்கு குறைந்த அளவிலான முடிவுகளை எடுப்பதே நன்மை பயக்கும்.

இலக்குகள் அமைத்தல்

வாழ்வில் இலக்குகள் என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். இது உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் படியாக விளங்குகிறது. இலக்குகளை அமைப்பதுடன், அது தொடர்பான சிந்தனையுடன் வேலையைச் செய்யும் போது சோம்பலை முறியடிக்க முடியும். இது இலக்கை நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. இலக்கு நிர்ணயிக்கும் போது உங்களது கவனம் மற்றும் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து இலக்குகளை அடையும் வண்ணம் செயல்பட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Care Tips: வெப்பம் (ம) புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை எப்படி பாதுகாப்பது?

பிடித்தமான விஷயங்கள் செய்தல்

சிலர் தினமும் ஒரே வேலை செய்து கொண்டிருந்தால், சலிப்பு ஏற்பட்டு விடும். இது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நமக்கு பிடித்தமான விஷயங்களில் சிறிது நேரம் ஒதுக்கினால் உடல் ஆற்றலுடன் செயல்படும். இது மனதை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

வலுவான நடைமுறைகளைக் கையாளுதல்

சோம்பேறித்தனத்தை வெல்லும் சிறந்த வழிகளில் ஒன்றாக நடைமுறைகள் உள்ளது. தினந்தோறும் வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்ளும் போது மூளை முடிந்த வரையிலான ஆற்றலைச் சேமிக்கிறது. மேலும் நாம் ஒரு விஷயத்தை கையாளும் போது மூளை சிறிது ஆற்றலைப் பயன்படுத்துகிறது. நாள்தோறும் வழக்கமான செயல்களைச் சரியாக செய்வதன் மூலம் சோம்பலிலிருந்து விடுபட முடியும்.

இவை அனைத்தும் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபடுவதற்கான மிக எளிமையான வழிகள் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

Image Source: Freepik

Read Next

Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Disclaimer

குறிச்சொற்கள்