
How to use dark circles under eye mask: வயதாகும்போது பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் உருவாவது. வீட்டுக்கு வீடு டி.வி., ஸ்மார்ட் போன், லேப்டாப் ந வந்து விட்ட ஆன்லைன் யுகத்தில் இதனை தடுப்பது என்பது மிகப்பெரிய சவால். ஆனால் சில ஐ மாஸ்க்குகளை பயன்படுத்துவதன் மூலமாக கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை மறைந்து போக செய்யலாம்.
Under eye mask at Home
கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய எளிய மாஸ்க் இது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை விரைவில் போக்கலாம். அதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்கள் வீட்டிலும் உடனடியாகக் கிடைக்கக்கூடியவை ஆகும்.
உருளைக்கிழங்கு சாறு (Potato Juice):
potato juice
உருளைக்கிழங்கு சாறு சருமத்திற்கு மிகவும் நல்லது. இதைப் பயன்படுத்துவது ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சருமத்தின் நிறமாற்றத்தை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை தடவினால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு சாறு சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கூறலாம். உருளைக்கிழங்கு சாறு வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளது. இது தோல் வயதான அறிகுறிகளை எளிதில் தடுக்க உதவுகிறது.
இதையும் படிங்க: Home Remedies For Dry Eye: கண்களில் வறட்சி, எரிச்சல் தாங்க முடியலையா?... உடனடி தீர்வுக்கு ஈசியான வீட்டு வைத்தியங்கள்!
காபி தூள் (Coffee Powder):
how-to-drink-black-coffee-to-lose-weight-(1)-1732291284081.jpg
காபி தூள் சருமத்தை உரிக்க மிகவும் நல்லது. இதில் உள்ள பல பொருட்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுவதோடு, முகப்பரு போன்ற பிரச்சனைகளையும் மாற்றும். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைப் போக்க காபித் தூள் நல்லது. வழக்கமான பயன்பாடு சருமத்தில் பல மாற்றங்களை கொண்டு வரும். காபி தூள் வயதான அறிகுறிகளை மாற்றவும் உதவுகிறது.
சந்தனம் (Sandal):
Sandal Powder for Dark Circles
சந்தனம் என்பது பழங்காலத்திலிருந்தே பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் தோல் பராமரிப்புப் பொருளாகும். சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. சருமத்தில் உள்ள கறைகள், கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்க சந்தனம் உதவுகிறது. சந்தனம் முகப்பருவை நீக்கி, சருமத்தின் நிறத்தை சீராக்க வல்லது. சந்தனம் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தேன் (Honey):
what-are-the-benefits-of-source-based-honey-01
தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் களஞ்சியமாகும். இதனை பயன்படுத்துவதால் சருமத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம். தேன் சருமத்தில் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். கண்களைச் சுற்றிப் பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்களைக் குறைக்கலாம். தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து பேக்குகளிலும் தேன் இன்றியமையாத பொருள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இதையும் படிங்க: Eye Care Homeremedies: கண்கள் சோர்வா இருந்தால் இதை செய்யுங்கள்… சட்டென சரியாகும்!
கண் கருவளைய மாஸ்க் செய்முறை (Under eye mask at Home):
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபி தூள், சம அளவு சந்தன தூள், சிறிது தேன் மற்றும் சிறிது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த பேக்கை கண்களுக்குக் கீழே தடவலாம். அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து இந்த பேக்கில் நனைத்து கண்களுக்குக் கீழே ஐ மாஸ்க் போல வைக்கலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையங்கள் மறைவதைக் கண்கூடாக காணலாம்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version