கருவளையம் (Dark Circles) என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவாகக் காணப்படும் பிரச்சனை. “நல்லா தூங்கினாலும் கருவளையம் போகவில்லை” என்று பலர் கவலைப்படுகிறார்கள். இதுகுறித்து டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் சுகன்யா நாயுடு முக்கிய விளக்கங்களை பகிர்ந்துள்ளார்.
தூக்கக்குறைவுக்கு அப்பாற்பட்ட காரணங்கள்
டாக்டரின் கூற்றுப்படி, “தூக்கமின்மை காரணமாக கருவளையம் வரலாம். ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. கண்ணுக்குக் கீழே தோல் மிக மெல்லியதாய் இருப்பதால் (0.5 மிமீ), இரத்த நாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. இதனால் கருவளையம் தெரியலாம்” என்றார்.
மேலும், “மரபியல் (Genetics), அலர்ஜி, கண்களை கசக்குதல், கண்களை தேய்த்தல், வீக்கம் போன்ற காரணங்களும் கருவளையம் உருவாக வழிவகுக்கும்” என்று மருத்துவர் கூறினார்.
கருவளையத்தை அதிகரிக்கும் காரணிகள்
* அடிக்கடி கண்களை கசக்கினால், பிக்மென்டேஷன் அதிகரிக்கும். இதனால் கருவளையம் உருவாகலாம்.
* திரவம் தேங்கி கண் சுற்றில் வீக்கம் ஏற்படும். இது கருவளையத்தை ஏற்படுத்தும்.
* கண் குழியாக தோற்றமளிப்பதும் கருவளையமாகப் பாவிக்கப்படுகிறது.
சிகிச்சை வழிகள்
மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சை முறைகள் பின்வருமாறு,
* பிக்மென்டேஷனுக்காக – கோஜிக் ஆசிட் (Kojic Acid) அடிப்படையிலான கிரீம்கள்
* பஃபினஸுக்காக – கஃபைன் அடிப்படையிலான கிரீம்கள்
* ஹாலோனஸுக்கு – Under Eye Fillers
View this post on Instagram
இறுதிச்சொல்..
டாக்டர் சுகன்யா நாயுடு கூறுகையில், “தூக்கம் கருவளையத்தை குறைக்க உதவலாம். ஆனால் உண்மையான காரணத்தை அடையாளம் கண்டு சரியான சிகிச்சை எடுத்தால், கருவளையத்தி அடியோடு ஒழிக்கலாம்” என்றார்.