பானை போன்ற தொப்பையை பனி போல உருக வைக்க இந்த விஷயங்களைக் கண்டிப்பா செய்யுங்க

How to reduce pot belly naturally: இந்தியாவில் பானைத் தொப்பையைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த பானைத் தொப்பையால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகிறது. இதில் தொப்பையைக் குறைப்பதற்கு நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பானை போன்ற தொப்பையை பனி போல உருக வைக்க இந்த விஷயங்களைக் கண்டிப்பா செய்யுங்க


How to reduce pot belly: இந்திய கலாச்சாரத்தில், மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்ற பல்வேறு காரணிகளால் பானை வயிறு மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்த காலத்தில் மக்கள் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், வறுத்த உணவுகள் மற்றும் இனிப்புகளையே அதிகம் விரும்புகின்றனர். இந்த உணவுகள், குறைந்த உடல் செயல்பாடுகளுடன் இணைந்தால் தொப்பை கொழுப்பை அதிகரிக்கக்கூடும். இன்று பெரும்பாலானோர் நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, குறைந்தபட்ச உடற்பயிற்சி, ஒழுங்கற்ற உணவு நேரங்கள் மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர்.

ஆனால், இந்த காரணிகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கும் மற்றும் வயிற்றைச் சுற்றி கொழுப்பு குவிவதற்கும் வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூடுதலாக, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாதது, இரவு நேரங்களில் உணவு எடுத்துக் கொள்வது, பண்டிகைகளின் போது அதிகம் சாப்பிடுவது போன்ற இன்னும் சில காரணிகளும் இந்த பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம். எனினும், உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை உள்ளிட்ட நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இந்த பானை வயிறு பிரச்சனையை குணப்படுத்தலாம். இதில் பானை வயிற்றைக் குறைக்க நாம் பின்பற்றக்கூடிய சில உதவிக்குறிப்புகளைக் காணலாம்.

வயிற்றுப் பிரச்சனையை சமாளிக்க உதவும் குறிப்புகள்

உடற்பயிற்சி செய்வது

வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவும் பயிற்சிகளான கால் தூக்குதல், சைக்கிள் க்ரஞ்ச்ஸ் மற்றும் பிளாங்க் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை தொப்பைக் கொழுப்பை நேரடியாக எரிக்கவில்லை என்றாலும், கொழுப்பு குறைவதால் நடுப்பகுதியை உறுதிப்படுத்துகிறது. சிறந்த முடிவுகளைப் பெற ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற கார்டியோவுடன் இதை செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஈஸியான எக்சர்சைஸ் ஆனா எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும்.. எந்த உடற்பயிற்சி தெரியுமா?

சீரான உணவு நேரத்தைப் பின்பற்றுவது

ஒழுங்கற்ற நேரங்களில் உணவு உட்கொள்வதன் காரணமாக, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, அன்றாட வாழ்வில் சீரான மற்றும் நிலையான உணவு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, காலை உணவு 9 மணிக்குள், மதிய உணவு மதியம் 1 மணிக்குள், இரவு உணவு 7-8 மணிக்குள் சாப்பிடலாம். அதே சமயம், இரவு 9 மணிக்குப் பிறகு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை செரிமானத்தை மெதுவாக்கி, அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது.

சர்க்கரை மற்றும் வறுத்த உணவுகளை கட்டுப்படுத்துவது

லட்டு, ஜிலேபி, குலோப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகள் மற்றும் சமோசாக்கள், பக்கோடாக்கள் போன்ற சிற்றுண்டி வகைகள் முறையே அதிகளவு சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளது. இவை உடலில் இன்சுலினை விரைவாக அதிகரித்து, வயிற்றில் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கிறது. வயிற்றில் கொழுப்பு குவிவதைத் தவிர்க்க இவற்றை ஒதுக்க வேண்டும் அல்லது மிதமாக உட்கொள்ளலாம். எனினும், இந்தப் பொருள்களுக்கு மாற்றாக பழங்கள், வெல்லம் சார்ந்த இயற்கை இனிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது

இந்தியாவில், தற்போதைய காலகட்டத்தில் மேசை வேலைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது பொதுவான ஒன்றாகும். எனினும், நீண்ட நேரம் உட்காருவதற்கு மாற்றாக ஒவ்வொரு மணி நேரமும் குறுகிய இடைவெளிகளை எடுத்துக்கொண்டு நடக்க, நீட்டிக்க அல்லது சில குந்துகைகள் செய்யலாம். மேலும் ஒரு நாளைக்கு 8,000–10,000 அடிகள் வரை செய்ய இலக்கு வைக்க வேண்டும். இது தவிர, யோகா, விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது நடனம் போன்ற செயல்பாடுகள் கொழுப்பை எரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

பகுதி கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்வது

பாரம்பரிய இந்திய உணவுகள் கார்போஹைட்ரேட் நிறைந்ததாக இருக்கும். ஒரு சிறிய தட்டில் 50% காய்கறிகள், 25% பருப்பு, பனீர் அல்லது கோழி போன்ற புரதம் நிறைந்தவை மற்றும் 25% சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் போன்றவற்றை தேர்வு செய்யலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது நீண்ட நேரம் திருப்தியை அளித்து, அதிக கலோரி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cardio Exercises: உண்மையிலேயே கார்டியோ ஒர்க் அவுட் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க உதவுமா?

சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சாப்பிடுவது

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக ராகி, பஜ்ரா, ஜோவர் போன்ற தினை வகைகள், பழுப்பு அரிசி அல்லது முழு கோதுமை போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை உடலில் மெதுவாக செரிமானம் அடைவதுடன், நீண்ட நேரம் நிரம்பியதாக வைத்திருக்கிறது. மேலும் இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. இவை அதிகப்படியான உணவைக் குறைத்து, தொப்பை கொழுப்பைக் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது.

நீரேற்றமாக இருப்பது

இந்தியர்கள் பெரும்பாலும் தண்ணீரைத் தவிர்த்து, சர்க்கரை பானங்கள் அல்லது டீயை ஒரு நாளைக்கு பல முறை அருந்துகின்றனர். ஆனால், இவை தொப்பைக் கொழுப்பை அதிகரிக்கலாம். இதற்கு மாற்றாக, தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்தலாம். சிறந்த செரிமானத்திற்காக, அதில் சீரகம், எலுமிச்சை அல்லது புதினா போன்றவற்றைச் சேர்க்கலாம். மேலும், குளிர்பானங்கள் மற்றும் அதிகப்படியான பால் தேநீரைக் குறைக்கலாம்.

மன அழுத்தத்தைக் குறைப்பது

நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கார்டிசோலின் அளவு அதிகமாகலாம். இது உடலில் தொப்பை கொழுப்பை ஊக்குவிக்கிறது. தியானம், ஆழ்ந்த சுவாசம் அல்லது வழக்கமான யோகா போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை கொழுப்பு இழப்பை ஆதரிக்கவும் வழிவகுக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: எடையைக் குறைக்க டயட் ஃபாலோ பண்றீங்களா? அப்ப இந்த பொருள் சேர்க்க மறந்திடாதீங்க

Image Source: Freepik

Read Next

வெறும் வயிற்றில் வாக்கிங் அல்லது எக்சர்சைஸ் செய்றீங்களா? இது தெரியாம செய்யாதீங்க

Disclaimer