Is it ok to do exercise empty stomach: அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி, நடைபயிற்சி இரண்டுமே உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடியதாகும். ஆனால், இதை நாம் சரியான முறையில் தான் செய்கிறோமோ என்று யோசித்ததுண்டா? ஆம். உண்மையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை தவறான வழிகளில் மேற்கொள்வது எதிர்பார்த்ததை விட அதிக விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. பலரும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது அதிக கொழுப்பை எரிக்க உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், இந்த யோசனை அவர்களுக்கு சரியானதாக தோன்றினாலும், இது மிகவும் வித்தியாசமானதாகும்.
ஒரு இயந்திரத்தைப் போலவே உடலுக்கும் நன்றாகச் செயல்பட எரிபொருள் தேவைப்படுகிறது. இந்நிலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும் உடற்பயிற்சி முந்தையை உணவைத் தேர்ந்தெடுப்பது அவசியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இதைத் தவிர்ப்பதால் அதிக தீங்கு விளைவிக்கும் அபாயம் ஏற்படலாம். காலை எழுந்ததும் முதலில் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது பல உடல்நலப் பிரச்சினைகளைத் தூண்டுகிறது. இது காலப்போக்கில் தீவிரமாக மாறக்கூடும். இதன் காரணமாக பலவீனம் அல்லது தலைச்சுற்றல் போன்றவை மட்டுமல்லாமல், வழக்கமான பழக்கத்தின் காரணமாக சில நாள்பட்ட நோய்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஈஸியான எக்சர்சைஸ் ஆனா எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும்.. எந்த உடற்பயிற்சி தெரியுமா?
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தீமைகள்
இதய பிரச்சனைகள் அதிகரிப்பு
ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சிக்கு முந்தைய உணவு உட்கொள்ளாத போது உடற்பயிற்சி செய்வது சிலருக்கு இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக குறைக்கும் என்று கூறப்படுகிறது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம். அதிலும், ஆரோக்கியமான நபர்களில் கூட, மோசமான ஆற்றல் அளவுகள் தீவிர உடற்பயிற்சிகளின் போது இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, ஒழுங்கற்ற இதய தாளங்கள் மற்றும் மார்பு வலி ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
குறைந்த இரத்த சர்க்கரை
உடலில் எந்த உணவும் இல்லாமல் உடற்பயிற்சி செய்வதால் இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. உடலில் ஆற்றலை எரிக்க போதுமான குளுக்கோஸ் இல்லாதபோது, அது அத்தியாவசிய செயல்பாடுகளை மெதுவாக்குவதன் மூலம் எதிர்வினையாற்றுகிறது. இது நடுக்கம், குழப்பம், தலைவலி மற்றும் மயக்கம் கூட ஏற்படலாம். சிலருக்கு இது சோர்வை உணரத் தொடங்கலாம். ஆனால் இதை பழக்கமாக மாற்றுவது ஆபத்தானதாக மாற்றலாம். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே குறைந்த இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு இது ஆபத்தை விளைவிக்கலாம்
கொழுப்பு இழப்புக்கு பதிலாக தசையிழப்பு ஏற்படுவது
உடற்பயிற்சி செய்யும் போது ஆற்றலுக்காக உணவு கிடைக்காதபோது, உடல் தசை திசுக்களை உடைக்கத் தொடங்குகிறது. இந்த செயல்முறையானது தசை கேடபாலிசம் என்று அழைக்கப்படுகிறது. இது கொழுப்பை எரிப்பதற்கு மாற்றாக, உடல் உடல் தொடர்ந்து தசை புரதத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. காலப்போக்கில், இது பலவீனமான வலிமை, தசையிழப்பு மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றம் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.
இரைப்பை பிரச்சினைகள் மற்றும் அமிலத்தன்மை
வயிற்றில் உணவு இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் போது, செரிமானத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அமிலம் தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில், உடல் செயல்பாடுகளின் போது இந்த அமிலம் வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்து, அமில ரிஃப்ளக்ஸ், வீக்கம் அல்லது இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கிறது. சிலருக்கு இது லேசான அசௌகரியமாகத் தொடங்குகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு இது அன்றாட வாழ்க்கையில் தலையிடும் நாள்பட்ட செரிமான பிரச்சனையாக மாறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cardio Exercises: உண்மையிலேயே கார்டியோ ஒர்க் அவுட் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க உதவுமா?
உடற்பயிற்சி செய்யும் போது சோர்வு
உணவிலிருந்து சக்தி கிடைக்காமல், உடலில் எரிபொருள் விரைவாக தீர்ந்துவிடும் அபாயம் ஏற்படலாம். இதன் காரணமாக, இது சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் உடற்பயிற்சி செயல்திறனில் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம். உடலால் உடற்பயிற்சியை முழுமையாகச் செய்ய முடியாத சமயத்தில் உடற்பயிற்சியின் தரம் பாதிக்கப்படலாம். காலப்போக்கில், இந்த நிலையான சோர்வானது முழுமையான சோர்வுக்கு வழிவகுக்கலாம் அல்லது சுறுசுறுப்பாக இருக்க உந்துதலை இழக்கச் செய்யலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக, உணவைத் தவிர்ப்பது மன அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைப் பாதிக்கலாம். உதாரணமாக, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல், உடல் அழுத்தத்தில் இருக்கும்போதும், எரிபொருள் குறைவாக இருக்கும்போதும் அதிகரிக்கும். காலப்போக்கில் கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும்போது, அது தூக்கத்தை கெடுக்கலாம். மேலும் தொப்பைக் கொழுப்பை அதிகரிக்கலாம். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆரோக்கியமாக இருப்பது அல்லது எந்த உடற்பயிற்சி இலக்குகளையும் அடைவதை கடினமாக்கலாம்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வதால், இது போன்ற ஏராளமான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: பெண்களே.. கஷ்டமான வீட்டு வேலையையும் ஈஸியா செய்து முடிக்கணுமா? இந்த பயிற்சி உங்களுக்கு உதவும்
Image Source: Freepik