Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

  • SHARE
  • FOLLOW
Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

தினமும் தூங்கும் முன் செய்ய வேண்டியவை

உறக்க நேரத்தைத் தேர்ந்தெடுப்பது

எப்போதும் தூங்கும் போது சரியான உறக்க நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் படி, உறங்க செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் மனதை அமைதியாக வைத்து உறங்க செல்ல வேண்டும். இது இரவு முழுவதும் நல்ல உறக்கத்தைத் தரக்கூடியதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்திலிருந்து குணமடைவதற்கான 7 அறிகுறிகள்

மொபைல் பயன்பாட்டைத் தவிர்ப்பது

உறங்கும் முன் தொலைக்காட்சி பார்த்தல், மொபைல் பயன்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இந்த மின்னணு சாதனங்கள் மூளையை அமைதியிழக்கச் செய்யும். மேலும், அளவுக்கு அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பது உறக்கத்தைக் கெடுப்பதாக அமைகிறது. எனவே, தூங்குவதற்கு முன்னதாக மொபைல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குளியல் எடுப்பது

தூங்குவதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்துக் கொள்ளும் போது நல்ல தூக்கத்தை உணரலாம். தூங்கும் முன் குளியல் செய்வதால், நாள் முழுவதும் ஏற்படும் சோர்வை விலக்கி, நன்றாக தூங்க முடியும்.

குறைவான அளவில் உணவு

எப்போதும் படுக்கைக்கு முன் குறைவான அளவிலான உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக உணவு அஜீரணக் கோளாறை ஏற்படுத்துவதுடன் தூக்கத்தைக் கெடுக்கும். இதனால் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?

தியானப் பயிற்சி செய்தல்

இரவில் தூங்கும் முன் தியானம் செய்வதால் மன அழுத்தம் குறையும். மேலும் இது மன அமைதியை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இரவு நேர தியானப் பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இசை கேட்கும் பழக்கம்

மன அமைதியைத் தூண்டும் இசை, கவலைகள், பதட்டங்களிலிருந்து விடுதலை அளிக்கும். இதனால் நல்ல அமைதியான தூக்கத்தைப் பெறலாம். ஹெட்செட் உபயோகிக்காமல் இசை கேட்பது நல்லது.

புத்தகம் படித்தல்

பொதுவாக புத்தகம் படிப்பது மூளைக்கு நல்ல வளர்ச்சியை தருவதாகவும், மன அமைதியைத் தருவதாகவும் அமைகிறது. எனவே, சமூக வலைதளங்களில் இருப்பதை விட்டு, தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பது ஆரோக்கியமான தூக்கத்தைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: வேலையில் கவனம் செலுத்துவதில் சிக்கலா? அதனை சமாளிக்கும் 7 வழிகள் இங்கே

Image Source: Freepik

Read Next

செக்ஸ் வாழ்க்கை மன ஆரோக்கியத்தை பாதிக்குமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே

Disclaimer

குறிச்சொற்கள்