Bedtime Drinks: நைட் தூங்கும் முன் இந்த ட்ரிங்ஸ் குடிங்க! தூக்கம் வேற லெவல்ல வரும்

  • SHARE
  • FOLLOW
Bedtime Drinks: நைட் தூங்கும் முன் இந்த ட்ரிங்ஸ் குடிங்க! தூக்கம் வேற லெவல்ல வரும்

நல்ல இரவு தூக்கத்திற்கு அருந்த வேண்டிய பானங்கள்

சூடான பால்

இது ஒரு சிறந்த இரவு தூக்கத்திற்கு உதவும் பானமாகும். பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. மேலும் இது செரோடோனின் மற்றும் மெலடோனின் உள்ளிட்ட தூக்கத்திற்கு உதவும் பொருட்களாக மாறுகிறது. ஆய்வு ஒன்றில் பால் நீண்ட காலமாக அறியக்கூடிய தூக்கத்தை ஊக்குவிக்க உதவும் பானமாக பயன்படுத்தப்படுகிறது. பாலில் தூக்கத்தை ஊக்குவிக்கும் விளைவுகள் நிறைந்துள்ளது. மேலும் இது தூக்கத்தை ஊக்குவிக்கும் கூறுகளின் வளமான மூலமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Ginger Tea: தூங்க செல்லும் முன் எலுமிச்சை மற்றும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நல்லதா?

கெமோமில் டீ

இந்த தேநீர் ஆனது இயற்கையாகவே மயக்க விளைவைக் கொண்டுள்ளது. ஆய்வு ஒன்றில் கெமோமில் தேநீர் அருந்துவது படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான பானமாகக் கருதப்படுகிறது. மேலும் ஜர்னல் ஆஃப் அட்வான்ஸ்டு நர்சிங் நடத்திய ஆய்வில் மோசமான தூக்கத்தை அனுபவிக்கும் பெண்கள் கெமோமில் டீ அருந்துவதால் அவர்களின் தூக்கத்தின் தரம் மேம்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த டீ அருந்துவதன் மூலம் நல்ல, ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காஃபினேட்டட் கிரீன் டீ

பெரும்பாலான நபர்கள் படுக்கைக்கு முன்னதாக காஃபினேட் செய்யப்பட்ட எதையும் குடிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், உண்மையில் காஃபின் நீக்கப்பட்ட கிரீன் டீ தூக்கமின்மையை விலகிச் செல்ல உதவும். ஆராய்ச்சி ஒன்றில் தூங்குவதற்கு முன் குறைந்த காஃபின் கிரீன் டீ அருந்துவது உண்மையில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது தவிர, தேயிலை இலைகளில் நிறைந்துள்ள முக்கிய அமினோ அமிலமான தியானைன், அழுத்த எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

செர்ரி சாறு

புளிப்பு செர்ரி அல்லது புளிப்பு செர்ரி சாறு ஆனது டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் ஆகிய இரண்டின் செறிவைக் கொண்டுள்ளது. இந்த ஹார்மோன்களின் செறிவு தூக்கத்திற்கு உதவக்கூடியது. இவை தூக்கமின்மையைப் போக்குவதில் மிகுந்த நன்மை பயக்கும். புளிப்பு செர்ரி சாறு அருந்துவதால், ஒருவரின் மொத்த தூக்க நேரம் மற்றும் பங்கேற்பாளர்களின் தூக்க திறன் கணிசமாக மேம்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: World Sleep Day: இந்த பானங்களை குடித்தால் போதும்.. இரவு படுக்கையில் படுத்ததும் தூங்கிவிடுவீர்கள்!

லாவண்டர் டீ

நீண்ட காலமாகவே லாவண்டரின் வாசனை, அதன் இனிமையான மற்றும் அமைதியான பண்புகளுடன் தொடர்புடையதாகும். இந்த மணம் கொண்ட தாவரத்தை உட்கொள்வது, இது போன்றே அமைதி மற்றும் இனிமையான விளைவுகளையேத் தருகிறது. ஆராய்ச்சி ஒன்றில், லாவெண்டர் டீ அருந்திய பங்கேற்பாளர்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்ந்ததைக் கண்டறிந்துள்ளனர். இந்த பானம் ஆனது அவர்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தியதாகக் கூறுகிறது. தூங்கும் முன் இந்த டீ அருந்துவது தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மருத்துவ தாவரமாகும். இது மன அழுத்தம், பதட்டம் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அஸ்வகந்தாவை உட்கொண்டவர்களுக்கு தூக்கத்தின் தரம் கணிசமாக மேம்படுத்தப்பட்டதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஒரு ரெடிமேட் பானமாகவோ, தேநீராகவோ அல்லது ஆரோக்கிய உணவுக் கடைகளில் பானமாக கலக்கக்கூடிய பவுடராகவோ பயன்படுத்தலாம். எனினும், இது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பினும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்துகளில் விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த வகை பானங்களை அருந்துவதன் மூலம் சிறந்த மற்றும் ஆரோக்கியமான இரவு தூக்கத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World sleep day 2024: படுத்ததும் தூக்கம் வர.. இந்த உணவுகள சாப்பிடுங்க!

Image Source: Freepik

Read Next

World Food Day 2024: உலக உணவு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்