How to keep stomach healthy in summer: உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், குடல் ஆரோக்கியம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஆதாரமான ஒன்றாகும். குடல் நுண்ணுயிரானது உணவு, மன அழுத்தம் மற்றும் வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட வெளிப்புற காரணிகளுக்கு மிகவும் உணர்திறன் கொண்டதாகும். மேலும், பருவகால மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பாதிக்கலாம்.
இதன் காரணமாக, பல்வேறு செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக பருவகால மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பாதிக்கலாம். எனவே தான் கோடைக்காலத்தில் பலரும் குடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதற்கு முறையற்ற நீரேற்றம், மோசமான உணவு மற்றும் அதிகப்படியான உடல் வெப்பம் போன்ற பல்வேறு காரணிகள் கோடையில் செரிமான பிரச்சினைகளுக்கு பங்களிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: புளித்த உணவுகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது தெரியுமா?
கோடையில் குடல் ஆரோக்கியத்தின் பாதிப்பு
கோடைக்காலத்தில் அதிகரித்த வியர்வை காரணமாக நீரிழப்பு ஏற்படலாம். இது செரிமானத்தை மெதுவாக்குவதுடன், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். வெப்பமான வானிலையானது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஏனெனில், பாக்டீரியாக்கள் சூடான நிலையில் விரைவாக வளர்ச்சியடைந்து, செரிமானத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
மேலும் இந்த கோடைக்காலத்தில் சில சுவையான பருவகால பழங்கள் கிடைத்திருப்பினும், வெப்ப அலைகள், நீரிழப்பு மற்றும் வீக்கம், அமிலத்தன்மை மற்றும் தொற்று போன்ற செரிமான பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தின் மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பெறலாம். கோடையில் செரிமானத்தைக் கவனித்துக் கொள்ள, அசௌகரியத்தைத் தவிர்க்க வேண்டும். இந்த நாள்களில் குடலை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வைக்க சில குறிப்புகளைக் காணலாம்.
கோடைக்காலத்தில் குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள்
புதிய உணவுகளை உட்கொள்வது
கோடைக்காலத்தில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் படி, வெள்ளரிகள், பெர்ரி, தர்பூசணி, முலாம்பழம் போன்ற ஆரோக்கியமான பழங்கள் உடலுக்கு நீரேற்றத்தை அளிப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்த உதவக்கூடியதாகும். மேலும், புதிய உணவுகளை மட்டும் தேர்வு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் படி, புதிதாக தயாரிக்கப்பட்ட வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் நன்கு கழுவப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுக்லாம்.
நீரேற்றமாக இருப்பது
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கு மூலிகை தேநீர் வகைகளைத் தேர்வு செய்யலாம். அதே சமயம், உடலை நீரேற்றமாக வைப்பதற்கு நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எனவே கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கான வழிகளைக் கையாள வேண்டும்.
உடற்பயிற்சி செய்வது
கோடைக்காலத்தில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே நீச்சல், நடைபயிற்சி, யோகா போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வது குடல் ஆரோக்கியத்தைத் தூண்டுகிறது மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க உதவும் உணவுகள் இங்கே..
புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள்
குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயாடிக் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். எனவே தயிர், கேஃபிர் மற்றும் புளித்த காய்கறிகள் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த வகை உணவுகள் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், குடல் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
பகுதி அளவைக் கட்டுப்படுத்துவது
அதிகளவிலான உணவை உட்கொள்வது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்கவும், செரிமானத்தை சீராக வைக்கவும் பகுதி அளவைக் கையாள வேண்டும். இதற்கு சிறிய, அடிக்கடி உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறிய உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் உணவை சரியாக செரிமானம் செய்ய அனுமதிக்கிறது.
கோடைக்காலத்தில் வெப்பமான வெப்பநிலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்டத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே குடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு சில குறிப்புகளைப் பின்பற்றலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் சிம்பிள் அலோவேரா ரெசிபி! இப்படி செஞ்சி பாருங்க
Image Source: Freepik