Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

  • SHARE
  • FOLLOW
Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?


எண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடலைத் தளர்வடையச் செய்ய உதவும் எண்ணெய் குளியல் உடலின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

பல்வேறு தாவரங்கள் மற்றும் மரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயையே எண்ணெய் குளியலுக்குப் பயன்படுத்துகிறோம். இது உடலின் தசைகளைத் தளர்த்தி உடலுக்குக் குளிர்ச்சியான விளைவைத் தருகின்றன. உடலில் ஏற்படும் வலிகளைக் குறைத்து, வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன. எண்ணெய் குளியலைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வாதம் நோய், உடல் வலி போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?

மன அழுத்தத்தைக் குறைக்க

எண்ணெய் குளியல் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். வீட்டில் உள்ள சில அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி எண்ணெய் குளியல் செய்யும் போது அது அரோமாதெரபி என்ற அழுத்த நிவாரணத்தையும் அளிக்கிறது. இது உடலைத் தளர்வடையச் செய்வதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சூரிய ஒளி பாதிப்புக்கு எதிராக

சூரிய ஒளியின் வெளிப்பாடு, சருமத்தை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்வதாக உள்ளது. இது சருமப்பொலிவைக் கெடுக்கிறது. சருமத்தை மென்மையாக வைப்பதற்கும், ஈரப்பதமாக்கவும் சில இயற்கை பொருள்களிலிருந்து குளியல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுவதுடன், வறட்சியைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

நன்றாக ஓய்வெடுக்க

சூடான நீரில் குளியல் எடுப்பதை விட, எண்ணெய் குளியல் எடுப்பவர்கள் மிகவும் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவர். எண்ணெய் குளியல் எடுக்கும் போது உடல் சமநிலையை அடைவதுடன் நிதானமான அனுபவத்தைத் தருகிறது. இதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.

ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியல்

ஆயுர்வேத முறைகளின் படி, எண்ணெய்க் குளியல் என்பது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் சிகிச்சைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமையும் இந்த எண்ணெய்க் குளியல், உடலைத் தளர்வடையச் செய்யவும் உதவுகிறது. உடலின் எலும்பு வரை எண்ணெய் ஊடுருவும் தன்மை கொண்டிருப்பதால், மூட்டு, எலும்பு தேய்மானம் போன்றவை தவிர்க்கப்படுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sleeping Tips: உங்களின் தூக்கத்தை கெடுக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!

Image Source: Freepik

Read Next

Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்