Oil Bath: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முழு உடலையும் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்கின்றனர். உடல் முழுவதும் எண்ணெய் தடவி குழிப்பது பல வகைகளில் நன்மை பயக்கும். குறிப்பாக எண்ணெய் குளியல் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே மறந்துவிட்டார்கள். வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு மட்டுமே ஏணையோர் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். ஆனால் பாரம்பரியத்தில் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. பலரும் தங்களது வீட்டில் வாரத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். இதனால் பல பலன்கள் கிடைக்கும்.
முக்கிய கட்டுரைகள்
எண்ணெய் தடவிக் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சூரிய ஒளியில் எண்ணெய் குளியல் குளிப்பதன் மூலம், நம் உடல் வைட்டமின் டி மற்றும் சூரிய ஒளியின் பிற நன்மைகளை எளிதில் உறிஞ்சிவிடும், இது நம் உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், சருமத்தை சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
சூரிய ஒளியில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் உடலில் கால்சியம் குறைபாட்டைக் குணப்படுத்தும். நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கூட்டு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும். இது மட்டுமின்றி, சருமத்தின் நுண்ணுயிரிகளுக்கு ஊட்டமளித்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக பராமரிக்கவும் உதவுகிறது.
எள் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கலாம். இது தவிர, தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் இது உதவும்.
எள் எண்ணெயில் காணப்படும் செசமால் மற்றும் செசமின் ஆகிய இரண்டு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள், தோலில் உள்ள நுண்ணிய கோடுகள் மற்றும் துளைகளின் வளர்ச்சியைக் குறைக்க உதவும். முதுமையைத் தடுக்கும் இயற்கைப் பொருளாகவும் இது செயல்படுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் கண், காது, மூக்கு, சருமம் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறப்பாக செயல்படும்.
எண்ணெய் குளியல் இரத்த ஓட்டத்தை தூண்டும். இது உடல் முழுவதற்கும் புத்துணர்ச்சியை அதிகரிக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதில் கவனம் தேவை
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் தீமைகள் சிலவகை இருந்தாலும், இது ஆதாரப்பூர்வமானது அல்ல. தினசரி எண்ணெய் குளியல் இதந் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சில எண்ணெய்கள் மூலம் தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம்.
எண்ணெய்கள் துளைகளை அடைத்து முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
தோல் மற்றும் முடியில் இருக்கும் எண்ணெய்களை முழுவதும் குளித்து செய்வது சிரமமாக இருப்பதால் சிலர் அந்த நாள் முழுவதும் தொந்தரவை சந்திக்கிறார்கள்.
குளிக்கும் போது சிறிய அளவிலான எண்ணெயை உட்கொள்வதன் மூலம் இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா?
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சில தீமைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் முறையாகவும் வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதும் உடலுக்கு அதீத நன்மை பயக்கும். நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் சுத்தமானது ஆரோக்கியமானதா என்பதை நன்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது ஆரம்பத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் உடல் அதற்கு பழகியவுடன் ஏணைய நன்மைகளை வழங்கும்.
Image Source: FreePik