Oil Bath Tips: உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமது பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, சளி, இருமல் போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க உடல் முழுவதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறார்கள்.
உடல் முழுவதும் எண்ணெய் தடவி குளித்து பின் சாம்பிராணி எனப்படும் தூபம் போடுவதே எண்ணெய் குளியல் என்றும் அழைக்கப்படுகிறது. எண்ணெய் குளியல் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: Risks of Poor Sleep: தூக்கமின்மை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?
ஆரோக்கியமான எண்ணெய் குளியல் வழிகள்
அனைத்து பருவத்திலும் உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவும்
- நல்லெண்ணெய் உடல் முழுவதும் தடவி குளிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
- எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் மசாஜ் செய்வது உடலின் உள்ளே இருக்கும் வெப்பத்தை நீக்குகிறது.
- உங்கள் உடலின் வெப்பநிலை என்பது வெளிப்புற சூழலுடன் சமநிலையில் இல்லாத நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- எள் எண்ணெய் உடல் வெப்பத்தை குளிர்விக்க பெரும் உதவியாக இருக்கும்.
- எள் எண்ணெய் மசாஜ் மூலம், உங்கள் உடல் வெப்பநிலை வெளிப்புற வெப்பநிலைக்கு ஏற்ப சரிசெய்ய தயாராகிறது.
- இதன்மூலம் பல நோய்கள் உங்களை பாதிக்காமல் தடுக்கலாம்.

வறண்ட சருமம்
மாறிவரும் பருவத்தில், சருமத்தில் லேசான வறட்சி அடுக்கு உருவாகத் தொடங்குகிறது. காலப்போக்கில் அது தடிப்பாக மாறலாம். எள் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும் என நம்பப்படுகிறது. மேலும், உங்கள் சருமம் ஆண்டு முழுவதும் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.
முடி உதிர்தல் மற்றும் பொடுகு
வானிலை மாற்றம் காரணமாக பலர் முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதைத் தவிர்க்க எள் எண்ணெய் குளியல் என்பது சிறந்த தீர்வாக இருக்கும். இது உங்கள் பொடுகு பிரச்சனைகளை குறைக்க பெருமளவு உதவியாக இருக்கும்.
மேலும் எண்ணெய் குளியல் என்பது வறட்சியை நீக்கி முடியை கருப்பாக மாற்ற பெருமளவு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் நரை முடி பிரச்சனை இருந்தால் தவறாமல் எள் எண்ணெய் மசாஜ் செய்து குளிப்பது நல்லது.
எண்ணெய் குளியலுக்கு பிறகு என்னவகை உணவு சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது?
நல்லெண்ணெய் தேய்த்து குளித்த பிறகு குறிப்பிட்ட உணவுகளை தொடவேக் கூடாது. அது, குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்க்ரீம், பூசணிக்காய், வெல்லம், மாங்காய் உள்ளிட்டவைகளை சாப்பிடக் கூடாது.
அதேபோல் தேங்காய், எள், கொள்ளு, கீரை வகைகளான அரைக்கீரை, அகத்திக்கீரை, கத்தரிக்காய் ஆகியவைகள் சாப்பிடவேக் கூடாது.
மேலும் அசை உணவுகள் என்று பார்த்தால், நண்டு, மீன், கோழி, சிவப்பு இறைச்சி போன்றவைகளை தவிர்ப்பது மிக நல்லது.
மேலும் படிக்க: இரும்பு போல வலுவான எலும்பு வேணுமா? மருத்துவர் சொல்லும் குறிப்புகள் இதோ!
என்ன உணவுகள் சாப்பிடலாம்?
- நல்லெண்ணெய் தேய்த்து குளித்த பிறகு குறிப்பிட்ட உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
- அது சூப் வகைகள் ஆகும். குறிப்பாக ஆட்டுக்கால் சூப், ஆட்டு சூப் குடிக்கலாம்.
- இது உடலுக்கு மிகவும் நல்லது.
- அதேபோல் நெய் சேர்ப்பதும் நல்லது.
- மேலும் மிளகு ரசம் வைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.
- அதேபோல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை சேர்க்கலாம்.
pic courtesy: freepik