After Bath Mistakes: குளித்த உடனே இதை செய்தால் பெரிய பெரிய பாதிப்புகள் வரும்.. ரெடியா இருங்க!

  • SHARE
  • FOLLOW
After Bath Mistakes: குளித்த உடனே இதை செய்தால் பெரிய பெரிய பாதிப்புகள் வரும்.. ரெடியா இருங்க!

சுத்தம் சோறுபோடும் என பலர் கூறுவார்கள். அதற்கேற்ப ஒருவரின் ஆரோக்கியத்திற்கு உணவு முறை எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் சுத்தமும் சுகதாரமும். தினசரி குளியல் என்பது உடலுக்கு பல நன்மைகளை தரும். ஆனால் எதைஎதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அதை அப்போதுதான் செய்ய வேண்டும். அதன்படி குளித்த பிறகு ஒரு சில செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது.

குளித்தவுடன் இதை செய்யவேக் கூடாது

முதலில் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது உணவு உண்ட உடனேயே எக்காரணம் கொண்டும் குளிக்க கூடாது. அதேபோல் குளித்த உடனேயே சில செயல்களை செய்யக்கூடாது. இது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

தண்ணீருக்கு நோ நோ

குளித்த உடனே தண்ணீரை எக்காரணம் கொண்டும் குடிக்கக் கூடாது. குளித்த உடன் உடல் வெப்பநிலையும், இரத்த ஓட்டமும் மாறுபாடுடன் இருக்கும். எனவே குளித்த உடன் தண்ணீர் குடிப்பது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உடல் வெப்பநிலை மாற்றம் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

இரத்த அழுத்தம் சீர்குலையும்

குளித்த உடன் தண்ணீர் குடிக்கும்பட்சத்தில் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். அதேபோல் இது இரத்த ஓட்டத்தை சமநிலையற்றதாக மாற்றக் கூடும். இரத்த அழுத்தத்திலும் மாறுபாடு ஏற்படும்.

ஹேர் ட்ரையருக்கு நோ

குளித்த பிறகு ஹேர் ட்ரையர் பயன்படுத்தினால் முடியின் மென்மைதன்மை குறையும். அதேபோல் முடி வறட்சி பிரச்சனை ஏற்பட்டு உதிரும் வாய்ப்புகள் உண்டாகக்கூடும்.

உடலை அழுத்தியோ வேகமாகவோ துடைக்கக் கூடாது

குளித்த உடனேயே அனைவரும் நேரடியாக டவலைதான் எடுப்போம். சிலர் ஈரத்தை வேகமாக எடுத்த வேகமாகவும் அழுத்தியும் துடைப்பார்கள். இப்படி அழுத்தி தேய்த்தால் சருமத்தில் உள்ள நீர்த் துளிகள் வெளியேறி சரும நீரிழப்பு பிரச்சனை ஏற்படக்கூடும். அழுத்தி தேய்த்தால் தோலுக்கு அரிப்பு பிரச்சனையும் ஏற்படலாம்.

குளித்த உடன் வெயிலில் செல்ல கூடாது

குளித்த உடன் வெயிலில் சென்றால் உடல் சூடுபிடிக்கும். சரும பிரச்சனை ஏற்படக் கூடும். அதேபோல் முகப் பொலிவும் இழந்து உடல் புத்துணர்ச்சியே போகிவிடும்.

குளித்த உடன் இதையெல்லாம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எனவே கவனமாக செயல்படுவது மிக முக்கியம்.

Image Source: FreePik

Read Next

Dengue Mosquito: புடிங்கடா இவன! டெங்குவை பரப்பும் கொசு இது தான்! எப்படினு பாருங்க

Disclaimer

குறிச்சொற்கள்