How turmeric helps with healing: அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள், மூலிகைகள், மசாலாக்கள் போன்றவை ஏராளம் உள்ளது. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைவழங்குகிறது. அவ்வாறு நம் அன்றாட உணவில் மசாலாக்களில் ஒன்றாக விளங்கும் மஞ்சள் உடலுக்குப் பல நன்மைகளை அள்ளித் தருகிறது. "தங்க மசாலா" என்று பெரும்பாலும் புகழப்படும் மஞ்சள், அதன் துடிப்பான நிறம், தனித்துவமான சுவை மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்படுகிறது. எனவே தான் இது சமையல் துறை மட்டுமல்லாமல் மருத்துவ நடைமுறைகள் இரண்டிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக அமைகிறது.
மஞ்சள் ஆனது Curcuma longa தாவரத்தின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரபல மசாலா பொருளாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த மற்றும் பிரபலமான மூலிகை சிகிச்சையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது, கல்லீரலை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை மஞ்சள் கொண்டுள்ளது. அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Powder Or Raw Turmeric: மஞ்சள் தூளை விட பச்சை மஞ்சள் சிறந்ததா? எதை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். மேலும், மஞ்சளில் வைட்டமின் சி, வைட்டமின் பி3, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிக்க உதவுகின்றன. இதில் மஞ்சளின் குணப்படுத்தும் பண்புகள் குறித்து, மஞ்சள் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
மஞ்சள் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
மஞ்சள் அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. மேலும், பல்வேறு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே மஞ்சளைத் தொடர்ந்து உட்கொள்வது உடலின் இயற்கையான பாதுகாப்புகளை மேம்படுத்தி, நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
மஞ்சள் அதன் செரிமான பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இது கொழுப்புகளை உடைக்கவும், பித்த உற்பத்தியைத் தூண்டவும் உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மஞ்சள் பாரம்பரியமாக வீக்கம், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு செரிமான அசௌகரியங்களுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது.
சுவை மற்றும் மணமிக்க மசாலா
மஞ்சள் ஒரு சமையல் இன்பத்தை விட அதிகமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குணப்படுத்துதல் பண்புகள் மிகுந்த சக்திவாய்ந்த மசாலா ஆகும். இதை அன்றாட உணவுகளில் சேர்ப்பது மட்டுமல்லாமல் மருத்துவ நன்மைகளுக்காகவும் நன்கு பயன்படுத்தப்படுகிறது. இது சுவையை மட்டும் ஆதரிக்காமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் ஆதரிக்கும் ஒரு சிறந்த மசாலா பொருளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் சிம்பிள் அலோவேரா ரெசிபி! இப்படி செஞ்சி பாருங்க
பல்துறை பயன்பாடுகளுக்கு
மஞ்சள் பல உணவு வகைகளில் அதிலும் குறிப்பாக, இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தக்கூடியதாகும். இதை சூப்கள், கறிகள், ஸ்மூத்திகள் என பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சமையலறை நன்மைகளைத் தாண்டி, அதன் குணப்படுத்தும் குணங்களுக்காக தோல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை வலி நிவாரணியாக
மஞ்சள், பாரம்பரிய மருத்துவத்தில் வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தலைவலி, தசை வலி போன்றவற்றிற்கும், கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தில் விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் குர்குமின் உதவுவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. மேலும் மஞ்சள் இரத்த நாளங்களைத் தளர்த்தி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
மஞ்சளை மிதமான உட்கொள்வது ஏன் அவசியம்?
எந்தவொரு பாதுகாப்பான பொருளாக இருப்பினும், அதை மிதமான அளவு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும். ஏனெனில், இதை அதிகளவில் எடுத்துக் கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். அதிகளவு எடுத்துக் கொள்வதால் வயிற்றுப்போக்கு, குமட்டல், இரைப்பை குடல் கோளாறு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மஞ்சள் இரத்த உறைதலை தடுக்கக்கூடியதாகும். இந்நிலையில் இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளுடன் இதை எடுத்துக் கொள்ளும் போது, இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் ஏற்படலாம். எனவே எதிர்மறை விளைவுகளைத் தவிர்த்து, உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சரியான அளவில் மஞ்சளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Turmeric For Weight Loss: எடை இழப்புக்கு மஞ்சள் எப்படி வழிவகுக்கும்.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..
Image Source: Freepik