Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Doctor Verified

மஞ்சள்.. கல்லீரலுக்கு நல்லதா.? கெட்டதா.? ஹார்வர்டு டாக்டரின் பதில்..

மஞ்சள் தினசரி உணவில் எடுத்துக்கொள்ளும்போது கல்லீரலுக்கு நன்மை தரும். ஆனால் அதிக அளவு சப்ப்ளிமென்ட்கள் ஆபத்தானது. ஹார்வர்டு பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி எச்சரிக்கை. 

மஞ்சள் (Turmeric) இந்திய சமையலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுகளில் மசாலா, பானங்களில் "கோல்டன் மில்க்" அல்லது கஷாயம் என பல வடிவங்களில் சேர்க்கப்படுகிறது.

ஹார்வர்டு பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி கூறுவதுப்படி, மஞ்சள் உணவாக தினமும் ½ முதல் 1 டீஸ்பூன் அளவில் எடுத்துக்கொள்ளும்போது, அது பொதுவாக பாதுகாப்பானதோடு, கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

உணவில் மஞ்சள்

* மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்னும் இயற்கை கூறு, அழற்சி (Inflammation) குறைக்கிறது.

* கல்லீரல் சுத்திகரிப்பு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

* கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) போன்ற நிலைகளில், குறைந்த அளவிலான மஞ்சள், அலர்ஜியை குறைத்து கல்லீரல் சுமையை தணிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒன்றா.. இரண்டா? பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?

சப்ப்ளிமென்ட் வடிவிலான மஞ்சள்

அதிக அளவு மஞ்சள் அல்லது சப்ப்ளிமென்ட்கள் எடுத்துக்கொள்ளும் போது, பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு உண்டு. சில ஆய்வுகள், அதிக அளவு குர்குமின் கல்லீரல் மீது அழுத்தம் தரும் எனக் கூறுகின்றன.

டாக்டர் சௌரப் சேதியின் அனுபவத்தில், சில நோயாளிகளில் அதிக டோஸில் எடுத்துக் கொண்டதால் கல்லீரல் காயம் (Liver Injury) ஏற்பட்டது. குறிப்பாக, மரபியல் (Genetics), மற்ற மருந்துகள், அளவு (Dosage) ஆகியவை தாக்கம் செலுத்துகின்றன.

என்ன செய்யலாம்?

* உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் – பாதுகாப்பானது, கல்லீரலுக்கு நன்மை பயக்கும்.

* அதிக டோஸ் சப்ப்ளிமென்ட் – எப்போதும் பாதிப்பில்லாது இருப்பதில்லை.

* கல்லீரல் பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சப்ப்ளிமென்ட்களை எடுக்க கூடாது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

* சாதாரண உணவு அளவில் மஞ்சள் பாதுகாப்பானது.

* Capsules / Supplements அதிக அளவில் எடுத்தால், சிலருக்கு அளவுக்கு மீறிய கல்லீரல் சுமை ஏற்படலாம்.

* அதனால், “மஞ்சள் அதிகமாக எடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்” என்பது தவறான நம்பிக்கை.

இறுதியாக..

மஞ்சள் என்பது நம் சமையலில் அவசியமான மசாலா மட்டுமல்ல, இயற்கையான மருந்தும் கூட. உணவில் இயல்பான அளவில் எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு நன்மை பயக்கும். ஆனால், அதிக டோஸ் சப்ப்ளிமென்ட்கள் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மஞ்சளைக் கொண்டு உணவுகளைச் சுவைபடுத்துங்கள். ஆனால், மாத்திரைகள் எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று மருத்துவர் கூறுகிறார்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான மருத்துவத் தகவல்களை மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் அல்லது மருந்து ஆலோசனைகளுக்காக தகுதியான மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

குடல் ஆரோக்கியத்திற்கான 10 புரதம் நிறைந்த உணவுகள் – டாக்டர் பால் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 30, 2025 10:18 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content