$
Health Benefits Of Smiling: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இதை உண்மையாக்கும் விதத்திலேயே சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. புன்னகை என்பது நம் அனைவருக்கும் இயல்பாக வரும் ஒன்றாகும். குறிப்பிட்ட சூழ்நிலையில், மகிழ்ச்சியாக இருந்தால் முகத்தில் முதலில் தோன்றுவது புன்னகையே. இந்த எளிய செயல்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் புன்னகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கும் இந்த புன்னகையைக் கொண்டாடுவதற்கென ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மற்றவருக்கு ஏதாவது நல்லதைச் செய்ய மக்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட தினமாகும். இந்த சிரிப்பிற்கும், ஆயுளுக்கும் உள்ள தொடர்பு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதிகமாக சிரிப்பதன் மூலம், ஆயுளையும் அதிகப்படுத்தலாம். இதில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!
சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் புன்னகையால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
இதய ஆரோக்கிய மேம்பாட்டிற்கு
ஆரோக்கியமான இதயம், புன்னகையின் ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். இதற்கு சிரிக்கும் போது உடலில் இருந்து வெளியிடப்படும் என்டோர்பின்களே காரணமாகும். மேலும், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
நீண்ட கால வாழ்விற்கு
நிறைய நேரம் புன்னகைப்பது, நேர்மறையான மனநிலையில் இருக்க உதவுகிறது. எனவே, இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். இதுவே நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த
உடலில் சிரிக்கும் போது வெளியிடப்படும் செரடோனின், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தருகிறது. இதுவே உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
செரடோனின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் காரணமாக அமைகிறது. இது மற்றவர்களுடனான தொடர்புகளை மேம்படுத்தி உறவுகளை பலப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: World Suicide Prevention Day: தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவும் சில வழிகள்
மூளை செயல்பாட்டிற்கு
புன்னகை மூளையை மாற்றியமைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இது இயற்கையாகவே, தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும். இதனைச் செய்யும் ஊக்கியாக புன்னகை செயல்படுகிறது. அடிக்கடி புன்னகைப்பது, நேர்மறையை அதிகரிக்கிறது. நேர்மறையை அதிகரிக்கும் போது, அது நடந்து கொள்ளும் முறையை மாற்றுவதற்கான நேரம் இது என மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க
புன்னகை செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த வழியாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிறைய புன்னகைப்பது நேர்மறையான ஆற்றலைத் தருகிறது. இது நம்மை அழகாக காட்ட உதவுவதுடன், கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
இரத்த அழுத்தம் சீராக
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் புன்னகை சிறந்த காரணியாகும். உடலில் உள்ள நரம்பு செல்கள் தொடர்பு கொள்ள நியூரோபெப்டைடுகள் தேவைப்படுகிறது. இவை மூளையில் மகிழ்ச்சியான இரசாயனங்களான செரோடோனின் மற்றும் எண்டோர்பினை வெளியிடுவதற்கு உதவுகிறது. பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது எண்டோர்பின்கள் வெளியிடப்படுவதை அறிந்திருப்போம். இது மன அழுத்தமில்லாமல் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வலியைக் குறைக்க
புன்னகைப்பதின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக வலியைக் குறைப்பது அமைகிறது. சிரிக்கும் போது வெளியாகும் என்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணிகளாக உடல் முழுவதும் பரவுகிறது.
இந்த இரசாயனங்கள் ஒன்றாக வேலை செய்யும் போது நன்றாக உணர வைத்து, உடல் முழுவதும் பரவி வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது மனநிலையை மேம்படுத்தி தளர்வை உண்டாக்கும்.

மனநிலை மேம்பாட்டிற்கு
உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காரணிகளில் புன்னகையும் அமைகிறது. அதாவது புன்னகைப்பது நம்மை எதிர்மறையாக பாதிக்கும் விஷயங்களில் இருந்து, கவனத்தை மாற்ற உதவுகிறது மற்றும் நேர்மறையானவற்றில் கவனம் செலுத்த உதவுகிறது. இதன் மூலம் மனச்சோர்வை எதிர்த்துப் போராடலாம். எனவே சிரிப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version