World Suicide Prevention Day: தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவும் சில வழிகள்

  • SHARE
  • FOLLOW
World Suicide Prevention Day: தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவும் சில வழிகள்


Suicidal Thoughts Avoid Tips: இன்றைய வாழ்க்கை முறை சூழ்நிலை, பலரையும் நெருக்கடியில் வைக்கிறது. வேலைப்பளு, தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட ஏராளமான காரணங்களினால் பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் தாங்க முடியாத வலிகளை அனுபவிக்கின்றனர். இது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதுடன் மன நலத்தையும் பாதிக்கிறது. இது அவர்களை தற்கொலை எண்ணத்திற்கு தூண்டுகிறது. எனினும், ஒருவருக்குத் தோன்றும் தற்கொலை எண்ணங்களைச் சமாளிப்பதும், புரிந்து கொள்வதும் மிகவும் கடினமான ஒன்றாகும். சில நேரங்களில் இவை விரைவாக ஏற்பட்டு விடலாம். சில சமயங்களில் அவர்கள் தாங்க முடியாத வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இதற்கு ஒருவருக்கு முக்கியமாக தேவைப்படுவது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கையுடன் இருப்பது கடினமாக இருந்தாலும் தற்கொலை எண்ணங்களை வெல்ல சில வழிகள் உள்ளன.

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி?

ஒருவருக்குத் தோன்றும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்க சில வழிகள் உள்ளன.

சுவாசித்தலில் ஈடுபடுதல்

மன அழுத்தம் அதிகமாக உள்ள நேரங்களில் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கலாம். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களுக்கு அதிக பயம் உண்டாகலாம். இந்த சமயத்தில் ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபட வேண்டும். இது இதயத்துடிப்பை சீராக்குகிறது. அதே நேரத்தில் நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து உங்கள் கவனத்தை மாற்றுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

உடல் ரீதியாக மாறுதல்

ஆபத்தான சூழ்நிலையில் இருப்பவர்கள் உடனடியாக தங்களின் இடத்தை மாற்ற வேண்டும். தற்கொலை எண்ணங்களுக்கு ஏற்ற படியான சூழ்நிலையைத் தவிர்த்து உடல் ரீதியாக மாற வேண்டும். கூடுதலாக இது போன்ற சூழ்நிலையில் தனியாக இருப்பதைத் தவிர்த்து நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் இருக்கும் இடத்தில் இருப்பது நம்பகத்தன்மையை உருவாக்கும்.

கவனத்தை ஒருமுகப்படுத்துதல்

கவனத்தை ஒருமுகப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. இதில் உங்களைத் துன்புறுத்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு வேறு ஏதாவதொன்றின் மீது கவனம் வைக்கலாம். இதில் எவ்வளவு விரைவாக பயிற்சி செய்கிறோமோ அவ்வளவு அதிகமாக தேவையற்ற எண்ணங்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள முடியும்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்த தியானப்பயிற்சியில் ஈடுபடலாம். இதில் சில நிமிடங்கள் கண்களை மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி வேறு ஏதாவதொன்றில் கவனத்தை செலுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்

மன அழுத்தத்துடன் இருக்கும் போது உங்களை அறியாமலேயே தசை இறுக்கமடைவதை உணரலாம். இது போன்ற சூழ்நிலையில் தசைகளை தளர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மனச்சோர்விலிருந்து மீளுதல்

மனச்சோர்வில் இருந்து மீள்வதற்கான வழியைத் தேட வேண்டும். புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது மொபைல் பயன்படுத்துவது, உடனிருப்பவர்களிடம் கலந்துரையாடுவது உள்ளிட்ட விஷயங்களின் மூலம் மனச்சோர்விலிருந்து நீங்க முடியும்.

இது போன்ற ஏராளமான வழிகளின் மூலம் தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்கலாம். மேலும், மனதில் நம்பிக்கை வைத்து எதையும் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

அடிக்கடி சுய இன்பம் காண்பதால் உடல் எடை குறையுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version