Sat Sep 12, 2026 | 03:07 AM IST

Sleeping Naked: ஆண்களே… இரவில் நிர்வாணமாக தூங்குவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாம்!

Does sleeping naked increase male fertility: நம்மில் பலர் இரவு தூங்கும் போது வசதியாகவும் சௌகரியமாகவும் இருக்க உள்ளாடை அல்லது ஆடை இல்லாமல் தூங்குவோம். இரவில் ஆடை இல்லாமல் தூங்குவதற்கும் உங்களின் கருவுறுதல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான். தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் கருவுறுதல் பிரச்சினைகளை அதிகமாக எதிர்கொள்கின்றனர்.

இதற்கு காரணம் சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கம். உடல் வெப்பநிலை அதிகரிப்பதால், கருவுறுதலில் பிரச்சனை அதிகரிக்கலாம் என்பது கருத்தரிப்பு நிபுணர்களின் கருத்து. நீங்கள் தூங்கும் போது மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்தால், அது உங்கள் உடல் பாகங்களில் வெப்பத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் இரண்டும் மோசமடையக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம் : Margazhi viratham Benefits:கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்

இரவில் தூங்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். அதே போல, பகலிலும் இறுக்கமான பேன்ட் அல்லது உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும். இல்லையெனில் அது உங்கள் விந்தணு எண்ணிக்கையையும் பாதிக்கலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க

இறுக்கமான உடையில் தூங்குவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்குமா என்பது குறித்து எந்த ஆராய்ச்சியும் வெளிவரவில்லை. ஆனால், இது உடலுக்கு பல நன்மைகளை தருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றார். விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பும் இதில் அடங்கும். நிர்வாணமாக உறங்குவது உடலை முழுமையாக ஓய்வெடுக்க உதவுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் விந்தணு எண்ணிக்கையும் சிறப்பாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Low Sperm Count: ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு இவைதான் காரணம்!

விந்தணுக்களின் ஆரோக்கியம் மேம்படும்

நிர்வாணமாக தூங்குவது உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. நிர்வாணமாக உறங்குவது பற்றிய ஆராய்ச்சி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றாலும், நிர்வாணமாக தூங்குவது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகிறது.

இரவில் ஆடையின்றி உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்?

  • ஆடைகள் இல்லாமல் தூங்குவது ஈஸ்ட் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் யோனி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இரவில் நிர்வாணமாக தூங்குவது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது எடை குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Men Health: எச்சரிக்கை…ஆண்களை பாதிக்கும் ஹார்மோன் மாற்றம்; அறிகுறிகள் இதோ!

  • இது உங்கள் முழு உடலையும் தளர்த்துகிறது, இது உங்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது.
  • ஆடை இல்லாமல் தூங்குவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Male Fertility: விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content