Male Fertility: விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

  • SHARE
  • FOLLOW
Male Fertility: விந்தணுக்களை அதிகரிக்க இதை செய்தால் போதும்!

வாழ்க்கை முறையில் மாற்றம்

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது அவசியம். அதாவது உடல் எடையை ஆரோக்கியமாக பராமரித்தல், சீரான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும் புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 

மனநிலையை நிர்வகிக்கவும்

மனநலமும் உங்கள் விந்தணு எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் மனநிலையை நிர்வகிப்பதற்கான ஆரோக்கியமான வழிகளைக் கண்டறியவும். இதற்கு தியானம், யோகா மற்றும் சுவாச பயிற்சிகளை நீங்கள் முயற்சிக்கவும். 

இதையும் படிங்க: Fertility Foods: விந்தணு அதிகரிக்க இந்த உணவுகள் போதும்!

உடற்பயிற்சியை மறக்காதீர்

நம் உடல் செய்பாடும் விந்தணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு  குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அனால் அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது விந்தணு உற்பத்தியில்எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெப்பத்தை தவிர்க்கவும்

வெப்பம் நிறைந்த இடத்திலோ, அதிகம் வெப்பம் கொண்ட பொருட்களை உபயோகிப்பதோ தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக நேரம் வெயில் செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக இறுக்கமான உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். 

உணவில் கவனம்

உங்கள் தினசரி உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். பழங்கள், இலை காய்கறிகள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக்கொள்ளவும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

நீரேற்றத்துடன் இருங்கள்

உங்கள் உடலை முடிந்த வரை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை தண்ணீர் அதிகமாக குடிக்கவும். இது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும், உங்கள் விந்தணு உற்பத்தியில் சேதம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். 

விந்தணு குறைவுக்கு பல காரணங்கள் உள்ளன. இது எதனால் ஏற்படுகிறது என்று புரிந்துக்கொள்வது அவசியம். அதற்கு நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் உங்களுக்கு இது குறித்த விவரங்களை கொடுப்பர். மேலும் இதற்காக நீங்கள் எதனை பின்பற்ற வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை உங்களுக்கு கூறுவர். 

Image Source: Freepik

Read Next

Men Health: எச்சரிக்கை…ஆண்களை பாதிக்கும் ஹார்மோன் மாற்றம்; அறிகுறிகள் இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்