ஆண் எனக் கர்வம் கொள்வதை விட, தந்தையெனக் கர்வம் கொள்ளவே ஆண்கள் விரும்பிகிறார்கள். தன் அணுவுக்கு உயிர் கொடுத்த பெண்ணையும் சேர்த்து சுமப்பவர்கள் ஆண்கள். ஒரு சில ஆண்கள் தந்தையாக மாற நிறைய இன்னல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு, மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாதது போன்ற காரணங்களால் ஆண்களின் கருவுறுதல் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது.

ஆண்களே, நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் கருவுறுதலை நேரடியாகப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது. பல நேரங்களில், ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவதால், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது.
இத்தகைய சூழலில், உடலின் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க, பின்வரும் உணவுகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கருவுறுதலை அதிகரிப்பதோடு, உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த ஆரோக்கியமான உணவுகள்பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஆண்களின் கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
முட்டை
முட்டை சாப்பிடுவது ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கிறது. முட்டையில் புரதம், ஜிங்க், வைட்டமின் D மற்றும் வைட்டமின் A நிறைந்துள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்தி, உடற்கட்டமைப்புடன் இருக்க உதவுகிறது. முட்டை சாப்பிடுவதால் எடை கூடாது. வேகவைத்த முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. முடிந்தவரை ஆம்லெட் அல்லது அரைவேக்காடாகச் சமைத்த முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மாதுளை
மாதுளை ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளைத் தரும். மாதுளையில் நார்ச்சத்து, ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளன. மாதுளை சாப்பிடுவதால், ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு, உடலின் பலவீனமும் நீங்கிவிடும். ஆண்கள் மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், விந்தணுக்களின் தரம் மற்றும் கருவுறுதல் மேம்படும்.
இதையும் படிங்க: Fertility Foods: விந்தணு அதிகரிக்க இந்த உணவுகள் போதும்!
உலர் பழங்கள்
உலர் பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. இவற்றை உண்பதால், உடல் வலு பெறுவதோடு, ஆண்களின் கருவுறுதலும் அதிகரிக்கும். தினமும், அக்ரூட், பாதாம், காய்ந்த திராட்சை போன்ற உலர் பழங்களை ஆண்கள் உட்கொள்ள வேண்டும். ஒமேகா-1 கொழுப்பு அமிலங்கள் அக்ரூட்டில் ஏராளமாகக் காணப்படுகின்றன, இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.
பூண்டு
பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதைச் சாப்பிடுவதால் விந்தணுக்களின் தரம் மேம்படும். பூண்டில் போதுமான அளவு செலினியம், வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 காணப்படுகின்றன. பூண்டில் உள்ள பண்புகள், ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்க உதவுகின்றன.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. இவற்றை உண்பதால் ஆற்றல் அதிகரிப்பதோடு, கருவுறுதலும் மேம்படும். பூசணி விதைகளில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு, ஆற்றல் மட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது.
குறிப்பு
இந்த உணவுகள் அனைத்தும் ஆண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கும். உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது அல்ர்ஜி இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னரே இந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.