மலட்டுத்தன்மை என்பது இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகளை வாட்டி வதைக்கும் பிரச்சனை. ஆண்களைப் பொறுத்த வரையில், அவர்களின் விந்தணுக்களின் உற்பத்தி குறைவது அல்லது விந்தணுவின் தரம் குறைவதுதான் குழந்தையின்மை ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலுக்கு மிகவும் முக்கியமானது. விந்தணுக்களின் எண்ணிக்கை சரியாக இல்லாவிட்டால், அது ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை கடுமையாக பாதிக்கும். இந்த விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக, உடல்நலப் பிரச்சனைகள், கெட்ட பழக்கங்கள் மற்றும் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை ஆகியவை ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கிறது.
ஆண்களின் கருவுறுதலைக் குறைக்கும் காரணிகள்:
உடல் பருமன்:
உடலில் கொழுப்பு சேர்வது மற்றும் அதிக பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டெக்ஸ்) விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு காரணமாகிறது. உடல் பருமன் டெஸ்டோஸ்டிரோனை பாதித்து விந்தணு உற்பத்தியின் அளவைக் குறைக்கிறது.
எனவே, அதிக எடை கொண்டவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் எடையை வைத்துக்கொள்வது உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரித்து கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கும்.
புகைபிடித்தல்:
புகைபிடித்தல் விந்தணுக்களின் எண்ணிக்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு கருவுறுதல் குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. அதனால் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோய்:

டைப் 2 நீரிழிவு டெஸ்டோஸ்டிரோனை பாதித்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்போது எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் எந்த பாதிப்பும் ஏற்படாது மற்றும் விந்தணு எண்ணிக்கையும் சாதாரணமாக இருக்கும்.
மது அருந்துதல்:

ஆண்களின் கருவுறுதலுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மிகவும் முக்கியமானது. இந்த ஹார்மோன் ஆண்களின் விந்தணு உற்பத்தி மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது, ஏனெனில் கல்லீரல் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை வெளியிடாது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
மாசு:

இன்றைய நாகரீக வாழ்வில் மாசுபாடு மனித உயிர்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. தரமற்ற காற்றை உள்ளிழுப்பதால் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் உடலில் நுழைந்து விந்தணுக்களை பாதிக்கிறது. மாசுபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமல்லாமல் மற்ற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. அதனால் எந்த மாசுபாடும் இல்லாத சுத்தமான சூழல் உள்ள இடத்தில் வாழ்வது மிகவும் நன்மை பயக்கும்.
Image Source: Freepik