Sleeping in darkness health benefits: அன்றாட வாழ்க்கையில் இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. அவ்வாறே இரவு நேரத்தில் வேலை செய்வது, இரவில் தாமதமாக தூங்குவது போன்றவற்றைக் கையாள்கின்றனர். உண்மையில் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இரவு நேர தூக்கமின்மை காரணமாக உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தான் ஒரு நல்ல இரவு தூக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அடித்தளமாக அமைகிறது.
அவ்வாறே, இரவு தூக்கத்தைப் பெற விரும்பினாலும் சில காரணிகள் தூக்கத்தைப் பாதிக்கிறது. அந்த வகையில், வெளிச்சத்தில் தூங்குவது தூக்க ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஏனெனில் விளக்குகளை ஏற்றிக் கொண்டு தூங்குவதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் ஆழ்ந்த உறக்க நிலைகளில் நுழைவது கடினமாக இருக்கும். இருண்ட சூழலில் தூங்குவது நமது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பல நன்மைகளைத் தருகிறது. ஒரு இருண்ட மற்றும் அமைதியான படுக்கையறை அமைதியான தூக்கத்திற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நிம்மதியான தூக்கத்திற்கு சமையலறையில் உள்ள இந்த 5 பொருட்கள் போதும்!
இருண்ட தூக்க சூழலில் தூங்குவதன் நன்மைகள்
இருண்ட தூக்க சூழல் தரமான தூக்கத்திற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் மெலடோனின் உற்பத்தி அதிகரிப்பது முதல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பது வரை இருட்டில் தூங்குவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த
அடிக்கடி இரவுநேர விழிப்புகளை அனுபவித்திருப்பவர்கள் அல்லது எப்போதாவது தூங்குவது கடினமாக இருந்தால் அதற்கு படுக்கையறையில் உள்ள லைட்டிங் நிலைமைகள் ஒரு காரணியாக இருக்கலாம். நம் உடலில் உயிரியல் கடிகாரம் உள்ளது. இது ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டதாகும். இந்நிலையில் பகல் இரவாக மாறும் போது, நம் உடல்கள் இயற்கையாகவே மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் ஆனது உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்ற சமிக்ஞையை அளிக்கிறது. எனினும், விளக்குகளை வைத்து தூங்குவது மெலடோனின் உற்பத்தியை சீர்குலைக்கலாம். அவ்வாறே தொலைபேசிகள், மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, பகல்நேரம் என சமிக்ஞைகளை அளித்து மூளையை ஏமாற்றலாம்.
உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு
இருட்டில் தூங்குவது மன ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தருகிறது. அதாவது இருண்ட அறையில் தூங்குவது பதட்டம், மனச்சோர்வு போன்ற பல்வேறு மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. நாம் முழு இருளில் தூங்கும் போது, நம் மூளையை நன்றாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
இது நாள் முழுவதும் நாம் அனுபவித்த தகவல் மற்றும் உணர்ச்சிகளை செயலாக்க உதவுகிறது. கூடுதலாக, இருட்டில் தூங்குபவர்கள் உயர் தரமான தூக்கத்தை அனுபவிப்பதுடன், அதிக புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். இதன் மூலம், தினசரி நடவடிக்கைகளைத் திறமையாகக் கையாளவும், அதிக உற்பத்தித் திறனைப் பெறவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: தூங்கும் போது கண் மாஸ்க் அணிபவரா நீங்கள்? அப்ப நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்!
பகல் நேரத்தில் கவனத்தை மேம்படுத்த
நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது, பகல் நேரங்களில் மூளை சுறுசுறுப்பாகவும், கவனத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது. அதன் படி, மேம்படுத்தப்பட்ட தூக்கத்திற்கு ஒரு எளிய வழியாக விளக்குகளை அணைத்து இருட்டில் தூங்க வேண்டும். ஏனெனில், வெளிச்சத்தில் தூங்குவது நமது தூக்க சுழற்சியை ஒளியின் மூலம் சீர்குலைப்பதுடன், மூளையை சுறுசுறுப்பாக வைத்து, ஆழ்ந்த உறக்க நிலைகளில் நுழைவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக நாம் எழும் போது, குறைந்த புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.
இது கவனம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே இருட்டில் தூங்குவது கவனத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கண் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. இரவு முழுவதும் வெளிச்சத்தில் இருக்கும் போது, கண்கள் தொடர்ந்து வேலை செய்து சிரமத்தை அனுபவிக்கிறது. எனவே போதுமான ஓய்வைப் பெறுவதன் மூலம் ஆரோக்கியமான கண்கள் மற்றும் கவனத்தை மேம்படுத்தவும் முடியும்.
உடல் நல அபாயங்களைக் குறைக்க
தூக்கம் என்பது உடலை ஓய்வெடுக்க வைக்க ஒரு சிறந்த வழியாகும். ஆனால், தூக்கத்தின் போது ஒளி வெளிப்படுவது உடலின் மீளுருவாக்கம் செயல்முறைக்கு இடையூற்றை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஒளியின் வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கலாம். இது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமானதாகும். மெலடோனின் உற்பத்தி சீர்குலைவது, தூக்கத்தின் தரத்தைக் குறைக்கிறது. இது நம்மை நன்றாக தூங்க உதவுவதுடன், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Better Sleep: ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்திற்கு இதை செய்யுங்க!
Image Source: Freepik