
$
Meena Sankranti Health Benefits: ஆண்டுதோறும் தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் தொடக்க நாள் மீன சங்கராந்தி எனப்படுகிறது. இந்த நாள் சிறப்பு மிக்க நாளாகக் கருதப்படுகிறது. மேலும் இந்நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பான நன்மைகளைத் தருகிறது.
மீனா சங்கராந்தி நாள்களில் சூரியன் மீன ராசிக்கு மாறுகிறது. இது ஆன்மீக அர்த்தத்துடன், உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய காலமாக அமைகிறது. இது ஆன்மீக வளர்ச்சியை அதிகரிப்பதுடன், தெய்வீக ஆற்றலை சீரமைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Overthinking Control Tips: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் அதீத சிந்தனை. இதை எப்படி தவிர்ப்பது?
மீனா சங்கராந்தி நாள் மற்றும் தேதி
மீனா சங்கராந்தி 2024-ல் மார்ச் 14 ஆம் நாள் காலை 6.40 மணிக்கு சூரிய உதயத்துடன் தொடங்குகிறது. இது புனிதமான ஆற்றல் நிறைந்த நாளாக மாறுகிறது. புனிதமான சடங்குகளைச் செய்வதற்கான சரியான நேரம் 12.38 முதல் மாலை 6.31 மணி வரை மகா புண்ணிய கால முகூர்த்தம் நடக்கும். குறிப்பாக மதியம் 12.30 முதல் மதியம் 1.02 வரை சக்திவாய்ந்த காலமாகக் கருதப்படுகிறது.

உடலுக்குத் தேவையான ஆற்றல்
மீனா சங்கராந்தி நாளில் சூரியன் மீன ராசிக்கு இடம்பெயர்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரும். உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதில் இந்த நாள் சிறப்புமிக்க நாளாகும். இந்த நாளில் ஆறுகளில் நீராடி சூரியனை வழிபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம்.
நேர்மறை ஆற்றலைத் தர
ஆன்மீகத்தைக் கடந்து முழுமையான வளர்ச்சிக்கான பன்முக வாய்ப்பாக மீனா சங்கராந்தி அமைகிறது. இது தனிநபர்களின் வாழ்க்கையின் பல்வேறு நலன்களைத் தருகிறது. மேலும் இந்நன்னாளில் நேர்மறை ஆற்றலைத் தந்து சீரான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இதனுடன் தனிப்பட்ட நோக்களைத் தடையின்றி செய்வதுடன் எளிதாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: எந்த நிலையிலும் மனம் தளராமல் மனதை வலிமையாக வைக்க இத ஃபாலோப் பண்ணுங்க
சுய விழிப்புணர்வுடன் இருப்பது
ஆன்மீக நன்னாளில் மீனா சங்கராந்தியின் ஆற்றல்களுடன் ஈடுபடுவது ஆன்மீக விழிப்புணர்வை அதிகரிக்கிறது. இதனுடன், சுய விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் செயல்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது, மற்றவர்களுக்கு உதவுவது போன்றவை நன்மை தரக்கூடியதாக அமைகிறது.

மீனா சங்கராந்தி நாளில் புன்னிய நதியில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்து வருவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் நன்மை தருவதாக அமைகிறது. அதன் படி, உடலுக்குத் தேவையான ஆற்றலை பெறுவது, நேர்மறை சிந்தனைகளைப் பெறுவது, சுய விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்றவை அடங்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Sathurthi Viratham 2024: உடல், மனம் இரண்டிற்கும் நன்மையைத் தரும் சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்
Image Source: Freepik
Read Next
Sathurthi Viratham 2024: உடல், மனம் இரண்டிற்கும் நன்மையைத் தரும் சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version