Sathurthi Viratham Benefits For Mental And Physical Health: விரதமிருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மையைத் தரும் என்பது உண்மையா? ஆம். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. விநாயகப் பெருமானுக்காக, சதுர்த்தி விரதத்தை மக்கள் பலரும் கடைபிடிக்கப்படுகிறது.
மாதத்திற்கு இருமுறை கடைபிடிக்கப்படும் சதுர்த்தி விரதத்தில் மக்கள் விரதமிருந்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றுகின்றனர். சதுர்த்தி விரதம் இருப்பது உடல் மற்றும் மனதை ஆரோக்கியத்துடன் வைப்பதுடன் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. விரதம் இருப்பது ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு லக்னோவின் பாத்திமா மருத்துவமனையைச் சேர்ந்த திருமதி அனுராதா சௌஹான் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health:இந்த 5 பழக்கங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்!
சதுர்த்தி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மேம்பட்ட ஆரோக்கியம்
சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை வழிபடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த நாளைக் கடைபிடிப்பது உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
எடை மேலாண்மை
இடைவிடாமல் உணவு உண்பதும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சரியான உணவு, சரியான பயிற்சிகள் போன்றவற்றின் மூலமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். உணவு இடைவெளி என்பது குறைந்தது 5 மணி நேர இடைவெளி தேவை எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், வயிறு காலியாக இருக்கும் போதே செரிமான உறுப்புகள் சரியான செயல்படும்.
ஜீரணத்திற்குப் பிறகு
சரியான உணவு இடைவெளி இல்லாமல் உணவை உட்கொள்வது கழிவுப்பொருள் உடலை விட்டு வெளியேறாமல் போகலாம். இது உடலில் அப்படியே தங்கியிருக்கும். ஆனால் வயிறு காலியாகும் போதே கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எனவே, ஏற்கனவே சாப்பிட்டது செரிமானம் அடையும் வரை, காத்திருந்து அதன் பிறகு அடுத்த வேளை உணவைச் சாப்பிட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க
புதிய தொடக்கம்
இந்த தினம் புதிய திட்டங்கள், முயற்சிகளைத் தொடங்குவதற்கு நல்ல நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தொடங்குவது வெற்றிகரமான தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உடலுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மகிழ்ச்சி மற்றும் செல்வம்
சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கும் போது, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு போன்றவற்றைப் பெறுவர். இவை அனைத்தும் விநாயகப் பெருமான் அளிக்கக் கூடிய நல்ல ஆரோக்கியமான நலனாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு விரதம் இருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Overthinking Control Tips: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் அதீத சிந்தனை. இதை எப்படி தவிர்ப்பது?
Image Source: Freepik