
$
Sickle Cell Anemia Signs And Symptoms In Children: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் நாள் உலக அரிவாள் செல் தினம் (World Sickle Cell Day) கொண்டாடப்படுகிறது. இது ஒரு மரபியல் ரீதியான நோயாகும். இந்த நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக வாதிடவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச்சக்தி குறைவாகவே இருக்கும். இதனால், அவர்கள் எளிதில் சிறிய அல்லது பெரிய உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்படுவர். இதில் சில பிரச்சனைகள் தானாகவே குணமாகலாம். அதே சமயம், சில நோய்கள் மரபியல் மற்றும் அவற்றின் அறிகுறிகளாக குழந்தைகளில் தாமதமாகத் தோன்றும்.
அந்த வகையில் மரபியல் நோயாக அமையும் அரிவாள் செல் இரத்த சோகை (Sickle Cell Anemia) குழந்தைகளைப் பாதிக்கும். இந்த சிக்கிள் செல் அனிமியா நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிகப்படாவிட்டால், மரணம் ஏற்படலாம். இதில் மருத்துவக் காப்பீட்டு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் நர்ஜோஹன் மெஷ்ராம் அவர்கள் சிக்கிள் செல் அனிமியா ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Drink Water After Urinating: சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? தீமைகள் இங்கே!
குழந்தைகளுக்கான சிக்கிள் செல் அனிமியா
பொதுவாக அரிவால் செல் அனிமியா என்பது ஒரு மரபணு நோயாகக் கருதப்படுகிறது. இதில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல. இந்த நோயால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில் குழந்தைகளின் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் குறைக்கப்படுகிறது. கூடுதலாக, இரத்த சிவப்பணுக்களின் வடிவமும் மாறுபடுகிறது. பொதுவாக இது ஓவல் வடிவில் இல்லாமல் உடைந்து (C Shaped) வடிவத்தில் இருக்கும்.
இந்த சி-வடிவ செல்கள் ஒட்டும் தன்மையுடனும், கடினமாகவும் மாறி, உடலில் உள்ள உறுப்புகளுக்கு இரத்தம் செல்வதை கடினமாக்குகிறது. இது ஒரு மரபணு கோளாறு எனப்படுகிறது. இதனால், இரத்த சிவப்பணுக்களில் அசாதாரண ஹீமோகுளோபின் புரதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு ஏற்படுவதால், உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் அடைவதில் சிரமம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு அரிவால் செல் இரத்த சோகை ஏன் ஏற்படுகிறது (Causes Of Sickle Cell Anemia In Children)
நாம் முன்பு பார்த்தது போலவே, இந்த நோயானது மரபணு காரணமாக ஏற்படுவதால், ஒரு குழந்தைக்கு அவர்களின் பெற்றோரிடமிருந்து பெறப்படுகிறது. ஆம். இதில் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருப்பது, பல நேரங்களில் பெற்றோர்களுக்கு சிக்கிள் செல் இரத்த சோகை இருப்பது கூட தெரியாது. ஏனெனில், பெரியவர்களுக்கு இந்த நிலை ஒரு போதும் தீவிரமான நிலையை எட்டாது. எனவே, குடும்பக் கட்டுப்பாடு செய்யும் போது அரிவாள் செல் நோய்க்கான பரிசோதனையை ஒரு முறை செய்து கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ghee For Healing Wound: உடல் மற்றும் மன காயங்களுக்கு சிறந்த தீர்வு தரும் நெய்! எப்படி தெரியுமா?
குழந்தைகளில் சிக்கிள் செல் அனிமியாவின் அறிகுறிகள் (Symptoms Of Sickle Cell Anemia In Children)
குழந்தைகளுக்கு சிக்கிள் செல் அனிமியா இருப்பதற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
- மெதுவான இரத்த ஓட்டம்
- விலா எலும்புகளுக்கு அருகில் உள்ள மண்ணீரல் சேதம்
- தீராத உடல் வலி
- எப்போதும் சோர்வாக உணர்வது
- மயக்கம்
- கால் வீக்கமடைதல்

குழந்தைகளுக்கான சிக்கில் செல் அனிமியா சிகிச்சை முறைகள்
இந்த நோயை நிர்வகிக்க மட்டுமே முடியும். அதிலும், ஒரு மருத்துவரின் வழக்கமான கண்காணிப்பில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும். மேலும் மருத்துவர்கள், குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். இதற்கு வலி மருந்து மற்றும் இரும்புச்சத்து மருந்து கொடுக்கப்படுகிறது. இது தவிர, வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும், குழந்தைகளுக்கு கடுமையான பிரச்சினைகள் இருப்பின், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பது நல்லது. இந்த நேரத்தில் குழந்தையின் உணவில் முழு கவனம் செலுத்துவதுடன் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த முறைகளை மேற்கொள்வதன் மூலம் சிக்கிள் செல் அனிமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அரிவாள் உயிரணுக்களுக்கான சிகிச்சையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அமைகிறது. எனினும், இந்த செயல்முறை சிக்கலானது மற்றும் ஆபத்தானது என்பதால் சில நோயாளிகளுக்கு மட்டுமே விருப்பமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Flesh Eating Bacteria: வெறும் இரண்டே நாள்களில் உயிரைக் குடிக்கும் அரியவகை தொற்றின் அறிகுறிகள் இதோ! எப்படி தடுப்பது?
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version