Summer Cold Causes And Symptoms: மழைக்காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக சளி, இருமல் அமைகிறது. ஆனால் வெயில் காலத்திலும் சளி தொந்தரவை பலரும் அனுபவிப்பர். ஏனெனில், வெயிலின் சூட்டைத் தாங்க முடியாமல் சளி பிரச்சனை ஏற்படும். இதனுடன் தும்மல், இருமல், தலைவலி பிரச்சனையும் சேர்ந்து வரும்.
கோடைக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனை பல்வேறு தொந்தரவுகளைத் தரலாம். எனவே முடிந்தவரை இந்த காலகட்டத்தில் சளி பிரச்சனையிலிருந்து விடுபட சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் கோடைக்காலத்தில் ஏற்படும் சளியின் அறிகுறிகள் மற்றும் அதனைத் தவிர்க்க உதவும் சில வழிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Causes of Vomiting: அடிக்கடி வாந்தி எடுப்பது எந்த நோய்களின் அறிகுறி தெரியுமா?
கோடையில் சளி பிடிப்பதற்கான காரணங்கள்
கோடைக்காலத்தில் சளி பிடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
- மழைக்காலம், கோடைக்காலம் என இரண்டு காலங்களிலும் சளி, இருமல் தொந்தரவுகள் அதிகம் காணப்படும். இதற்கு முக்கிய காரணமாக அமைவது கைகளைக் கழுவாமல் உண்பது, அழுக்கு கைகளால் கண்களைத் துடைப்பது போன்றவை நோய்த்தொற்றுக்கான முக்கிய காரணமாக அமைகிறது. நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்துவது உடலை அதற்கு எதிர்வினையாக மாற்றுகிறது. உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பின் கோடைக்காலத்திலும் சளி தொந்தரவை ஏற்படுத்தலாம்.
- கோடையில் உடல் வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகமென்பதால், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் வெயிலில் செல்லும் போது சிலர் சாறு, இளநீர், லெமன் சோடாவைக் குடிக்க வேண்டும். ஆனால், சாறாக அருந்துவது பழத்தின் நார்ச்சத்துக்களைக் குறைக்கிறது. இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.
- சுவாசிக்கும் காற்றில் பெரும்பாலும் மாசு நிறைந்தே காணப்படும். பகல் நேரத்தில் வெயிலில் செல்லும் போது நோய்த்தொற்றுக்கள், நச்சுக்காற்றை ஏற்படுத்தலாம். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Sleep After Dinner: இரவு சாப்பிட்ட உடனே தூங்குபவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்!
அறிகுறிகள்
- கோடைக்காலத்தில் சளியின் அறிகுறிகளாக தலைவலி, மூக்கு ஒழுகுதல், நெரிசல், தொண்டைப்புண் போன்றவை ஆகும்.
- கோடைக்கால சளி தொற்றுக்கு என்டோவைரஸ்கள் காரணமாகும். தொண்டை புண், மூக்கு ஒழுதல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் போன்ற சுவாச அறிகுறிகளைத் தூண்டுகிறது.
- ரைனோவைரஸ்களைக் காட்டிலும் கோடைகாலத்தில் என்டோவைரஸ்கள் அதிகம் காணப்படுகிறது. இவை குளிர்மாதங்களில் அதிகம் காணப்படுகிறது.
- சைனஸ் அல்லது தலையில் அழுத்தம், குறைந்த ஆற்றல், தசை வலி, தும்மல், தொண்டை புண் போன்றவை ஏற்படலாம்.
எனவே கோடைக்காலத்தில் சளி பிடிப்பதைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Urinary Problems: கோடையில் சிறுநீர் பிரச்னை ஏற்படுகிறதா? இதனை தடுக்க சூப்பர் டிப்ஸ் இங்கே…
Image Source: Freepik