Cancers And Women: பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் எது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Cancers And Women: பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் எது தெரியுமா?

புற்றுநோய் என்பது அனைத்து பாலினத்தவர்களையும் பாதிக்கும் ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினை. இருப்பினும், பெண்கள் மார்பகம், கருப்பை, கருப்பை வாய் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்கள் உட்பட சில வகையான புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோய்கள் ஒரு பெண்ணின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் மட்டும் அல்லாது அவளது வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Cancer Increasing Foods: உஷார்! இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டா புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்

புற்றுநோய் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது மற்றும் உடலின் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். குறிப்பாக மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்களுக்கு பெண்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோய் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்.

மார்பகப் புற்றுநோய் (Breast Cancer)

மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோயாகும். ஒரு பெண் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமன் அல்லது அதிக எடை ஏற்படுவது இயல்பு.

ஆரோக்கியமான எடையுடன் இருக்கும் வயதான பெண்களுடன் ஒப்பிடுகையில், அதிக எடை அல்லது பருமனானவர்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகம். மேமோகிராம், அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, ஹார்மோன் தெரபி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க உணவும் உதவலாம்.!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer)

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 35 முதல் 44 வயதுக்குட்பட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோயால் 300000-க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். பெண்கள் HPV அதாவது மனித பாப்பிலோமா வைரஸ் பாதிப்பால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. நமது உடல் செல்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதை கொள்ளும்.

ஒருவேளை, உங்கள் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவில்லை என்றால், அது உங்கள் கருப்பை வாயின் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும். வழக்கமான மகளிர் மருத்துவ பரிசோதனைகள், HPV தடுப்பூசி, பாப் பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பான உடலுறவு ஆகியவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கியமான படிகள் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம் : புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், இதைக் கண்டிப்பாக செய்யுங்கள்

கருப்பை புற்றுநோய் (Ovarian Cancer)

கருப்பை புற்றுநோயானது பெண்களிடையே புற்றுநோய் இறப்புக்கான ஐந்தாவது பொதுவான காரணமாக உள்ளது. மேலும், இது ஒரு "சைலன்ட் கில்லர்" என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவற்றவை மற்றும் குறிப்பிட்டத்தக்கவை அல்ல.

அதாவது, பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வந்தால் ஆரம்பத்திலேயே எந்த அறிகுறியும் இருக்காது என்கிறார்கள். நோய் அதிகரித்த பிறகு மட்டுமே பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றும். இவை முக்கியமாக மரபணு காரணங்களால் கண்டறியப்படலாம். அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் மூலம் இவற்றை குணப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Bladder Cancer: சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்

பெருங்குடல் புற்றுநோய் (Colorectal cancer)

பெருங்குடல் புற்றுநோய் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதை முன்கூடியே கண்டறிந்தால், வழக்கமான பரிசோதனைகள், முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இந்த நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கலாம் மற்றும் வெற்றிகரமான சிகிச்சைக்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்தும், நோய்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இந்தப் புற்றுநோய்களை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

இந்த பதிவும் உதவலாம் : மார்பக புற்றுநோய் பற்றிய கட்டுக் கதைகளை இனி நம்ப வேண்டாம் - உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்

நுரையீரல் புற்றுநோய் (Lung cancer)

தற்போதைய காலகட்டத்தில் ஆண்களை போலவே, பெண்களிடமும் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதால் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிகரெட்டில் இருந்து வெளியாகும் புகையால், ஆண்களை விட பெண் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது. புகைபிடிக்காதவர்களில், பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

புற்றுநோய்க்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை. ஆனால், புற்றுநோய்கள் மரபியல், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் விளைவாக ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம் : தோல் புற்றுநோய்: கவனிக்க வேண்டிய 7 அறிகுறிகள்

புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பற்றி பெண்கள் அறிந்திருப்பது மற்றும் நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய வழக்கமான ஸ்கிரீனிங் செய்ய வேண்டியது அவசியம். ஆரம்பகால கண்டறிதல் புற்றுநோயை கண்டறிந்தால், அது மிகவும் சிகிச்சையளிக்கக்கூடியதாக இருக்கும் மற்றும் மீட்கும் வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Cancer Increasing Foods: உஷார்! இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டா புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்

Disclaimer