Breast cancer awareness month: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எதனால் வருகிறது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Breast cancer awareness month: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எதனால் வருகிறது தெரியுமா?


மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் (Breast Cancer Awareness Month 2024)

ஆண்டுதோறும் ஒவ்வொரு அக்டோபர் மாதம் ஒரு சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் ஆபத்து காரணிகள் பற்றி மக்களுக்கு கல்வி கற்பிப்பது, மெட்டாஸ்டேடிக் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட மார்பக புற்றுநோயால் கண்டறியப்பட்டவர்களை ஆதரிப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும், தனிப்பட்ட மார்பகப் புற்றுநோய் அபாயத்தைப் பொறுத்து 40 அல்லது அதற்கு உட்பட்ட வயதுடைய பெண்களை வழக்கமான மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு செல்ல ஊக்குவிப்பது போன்றவை அடங்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Cancer Symptoms: மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!

பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள்

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் சிலவற்றைக் காண்போம்.

உடல் பருமன்

உடல் எடை அதிகரிப்பு காரணமாக நாம் பலதரப்பட்ட நோய் அபாயங்களைச் சந்திக்கிறோம். ஆனால் இதில் மார்பக புற்றுநோயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். மார்பக புற்றுநோய்க்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இதைத் தவிர்க்க உடல் பருமனை கட்டுப்படுத்துவது அவசியமாகும். எனவே தினந்தோறும் உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மோசமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது. பெண்கள் பலரும் வீட்டு உணவை தவிர்த்து வெளியில் நொறுக்குத் தீனிகளுக்கும், துரித உணவுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடல் செயல்பாடுகளுடன், ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

ஹார்மோன் சிகிச்சை

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஹார்மோன் சிகிச்சையும் அடங்கும். இதில் ஒரு பெண் நீண்ட காலமாக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை மிகவும் பொதுவானதாகி விட்டாலும், இது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breast Cancer Symptoms: கட்டியைத் தவிர மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்

கருத்தரிக்கும் வயதை அதிகரிப்பது

சரியான நேரத்தில் கருத்தரிப்பதன் மூலம், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ஆனால், இன்று பெண்கள் பலரும் 30-32 வயதிற்குப் பிறகு கர்ப்பத்தைத் திட்டமிடுகின்றனர். இது மார்பக புற்றுநோய் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.

குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுதல்

பெண்கள் சிலருக்கு சிறு வயதிலேயே மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு குறுகிய காலத்திற்கு உணவளிப்பதாகும். பிரசவத்திற்கு பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைத் தவிர்க்கலாம்.

மரபணு காரணங்கள்

பல சமயங்களில், பெற்றோருக்கு குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அது குழந்தைகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மோசமான வாழ்க்கை முறையைச் சரி செய்வதன் மூலமே மூலம் மார்பக புற்றுநோயை பெரிய அளவில் தடுக்கலாம். எனினும், மரபணு காரணமாக ஏற்படுவது இந்த பாதிப்பை சற்று கடினமாக்குகிறது.

இவை அனைத்தும் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளாகும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Cancer Prevention Foods: மார்பக புற்றுநோயைத் தடுக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

Image Source: Freepik

Read Next

Prostate Health: PSA அளவைக் குறைக்க உதவும் சூப்பர் ஃபுட்ஸ் இங்கே..

Disclaimer