$
Foods To Eat For Breast Cancer Prevention: இன்று பலரும் சந்திக்கக்கூடிய உடல் நலப் பிரச்சனைகளில் புற்றுநோயும் ஒன்று. புற்றுநோய்களில் பலவகைகள் உள்ளன. இவற்றில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் புற்றுநோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் உள்ளது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மரபியல், புகைபிடித்தல், உணவு மற்றும் உடல் எடை போன்ற பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆய்வின் படி, அனைத்து புற்றுநோய்களுக்கும் 35% காரணமாக இருப்பது உணவு முறையே ஆகும். மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க மற்றும் குறைப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்களைப் போல, ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம். ஆண்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 1% பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்பக புற்றுநோயைப் பொறுத்த வரை, மரபு ரீதியான காரணங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பை முழுவதும் தடுக்க முடியாது. எனினும், சில ஆய்வுகள் மெடிட்டரேனியன் டயட் என்ற கடல் உணவு மட்டும் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம் எனக் கூறுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Lung Cancer Symptoms: தொடர் இருமல் புற்றுநோயை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறும் விளக்கம்
மார்பக புற்றுநோயைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க சில உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, கால்சியம், ஃபோலேட், பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள், நரிங்கின், ஹெஸ்பெரிடின், குவெர்செடின் போன்ற ஃபிளவனாய்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல சேர்மங்கள் உள்ளன. இவை மார்பக புற்றுநோயைத் தடுக்க மற்றும் எதிர்த்துப் போராடக்கூடியவையாக அமைகின்றன. மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதால், இவை மார்பக புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான பாதிப்பு 10% குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எலுமிச்சை, லைம்ஸ், திராட்சைப் பழங்கள் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உணவுகளுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு நீரேற்றத்தைத் தருவதாகவும் அமைகிறது.

மசாலா மற்றும் மூலிகைகள்
மசாலா மற்றும் மூலிகைகளில் பெரும்பாலும் உணவு சுவைக்காக சிறிதளவு பயன்படுத்தப்படுவதாகும். எனினும், இதில் அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. இவை மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
அந்த வகையில் உணவுப் பொருளான மஞ்சள் புற்றுநோய் எதிர்ப்புக்குச் சிறந்த காரணியாகும். இது வீக்கம் மற்றும் செல் சேதத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளில் உள்ள முதன்மையான புற்றுநோய் எதிர்ப்பு குர்குமின் ஆகும். இவை மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. மஞ்சள் தவிர, கருமிளகு, இலவங்கப்பட்டை, இஞ்சி, ரோஸ்மேரி போன்றவை மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் மசாலா மற்றும் மூலிகைகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: எந்தெந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்?
இலை கீரைகள்
பொதுவாக அனைத்து பச்சை நிற இயற்கையான உணவுப் பொருள்களில், புற்றுநோய் எதிர்க்கும் தன்மை காணப்படுகிறது. முட்டைக்கோஸ் போன்றவற்றிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதற்கு உதவுகின்றன. அந்த வகையில், அடர்ந்த இலை கீரைகளான கடுகு கீரை, காலர்ட் கீரைகள், டேன்டேலியன் கீரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். முருங்கைக் கீரை, பாலக்கீரை போன்ற பல்வேறு விதமான கீரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த கீரைகளில் பீட்டா கரோட்டின், லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும், மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

பீன்ஸ் வகைகள்
பீன்ஸ் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. மேலும், இதில் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பீன்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வீக்கத்தைத் தடுக்க மற்றும் சேதமடைந்த செல்களைச் சரி செய்ய உதவுகின்றன. பீன்ஸில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், புற்றுநோய் பாதிப்புகள் குறையவும் உதவுகின்றன.
ஆய்வு ஒன்றில், பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு 20% அளவிலான மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பீன்ஸ் வாங்கும் போது, கவரில் அடைத்து வைக்கப்பட்ட பீன்ஸ் வாங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இதில் சோடியம் மற்றும் சேர்க்கைகளை அதிகளவு காணப்படும். இதற்குப் பதிலாக, உலர் பீன்ஸ் வாங்கலாம். மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க சுண்டல், கருப்பு பீன்ஸ், பட்டாணி, சோயாபீன்ஸ், பருப்பு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer: எலும்பு புற்றுநோய் அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் சிகிச்சை
மாதுளை
மாதுளையில் மார்பக புற்றுநோய் உட்பட, ஈஸ்ட்ரோஜனைச் சார்ந்த புற்றுநோய்களைத் தடுக்கும் மற்றும் எதிர்த்துப் போராடும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மாதுளையில் எலாகிடானின்கள் என்ற சேர்மங்கள் உள்ளன. இவை மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் மாதுளை சாறு மார்பக புற்றுநோய் புண்களை 75% முதல் 90% வரை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது.
மாதுளைச் சாறு தயாரித்து அருந்தலாம். மேலும் சாலட்கள், ஓட்ஸ், தயிர் போன்றவற்றில் மாதுளையைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலுவை காய்கறிகள்
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த உணவாகவே சிலுவை காய்கறிகள் உள்ளன. இந்த காய்கறிகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மற்றும் தடுக்கக் கூடிய சிறந்த கலவைகளையே உருவாக்குகின்றன. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சிலுவை காய்கறிகள் வீக்கத்தைத் தடுப்பது, செல் சேதத்தைத் தடுப்பது, மற்றும் தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் செல்களை அழிப்பது உள்ளிட்டவற்றிற்கு உதவுகிறது. மேலும் இவை கார்சினோஜென்கள் என்ற புற்றுநோய் உண்டாக்கும் பொருள்களை செயலிழக்கச் செய்யவும், கட்டிகளுக்குள் இரத்த நாளங்கள் உண்டாகாமல் தடுக்கவும் உதவுகிறது. இந்த காய்கறிகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், காலே, முள்ளங்கி போன்றவை அடங்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Bladder Cancer: சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்
Image Source: Freepik