Ways To Manage Endometriosis: எண்டோமெட்ரியோசிஸ் என்பது மாதவிடாய் நிலையுடன் தொடர்புடையதாகும். இந்த நோயால் ஃபெலோபியன் குழாய்கள், இடுப்பு, குடல், யோனி, குடல், போன்ற உடலின் மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. சில சமயங்களில் இந்த நிலையால் கடுமையான இடுப்பு வலி, சோர்வு மற்றும் அதிக மாதவிடாய் உதிரப்போக்கு உள்ளிட்டவை ஏற்படலாம்.
இந்த எண்டோமெட்ரியோசிஸ் நிலையால் வலி மட்டும் உண்டாவதில்லை. இதன் மற்றொரு விளைவாக கருவுறாமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனினும் இதன் முதன்மையான அறிகுறியாக ஏற்படும் விளைவு கடுமையான இடுப்பு வலி ஆகும். இது பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் உடல்நிலை மற்றும் மாதவிடாயுடன் தொடர்புடையதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Period Black Blood Causes: மாதவிடாய் இரத்தம் கருப்பாக இருக்கா? அதற்கு இதெல்லாம் தான் காரணமாம்
எண்டோமெட்ரியோசிஸ் நிலை
இது கருப்பைக்கு வெளியே உள்ள கருப்பைச் சவ்வைப் போன்ற திசுக்களின் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படும் சுகாதார நிலையாகும். இதனால் கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தலாம். எனவே என்டோமெட்ரியோசிஸ் உள்ளவர்கள் சில பாதுகாப்பான நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். ஏனெனில் எண்டோமெட்ரியோசிஸ் ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிப்பதாக அமைகிறது. இது உடல் மட்டுமல்லாமல், உணர்ச்சிகள் மற்றும் மன நிலையையும் பாதிக்கலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் நிர்வகிக்கும் முறைகள் (Tips To Manage Endometriosis)
எண்டோமெட்ரியோசிஸ் நிலையை சரியாக நிர்வகிக்க சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
போதுமான நீர் உட்கொள்ளல்
உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கொண்ட முக்கியமான நடைமுறையாக போதுமான அளவு நீர் உட்கொள்வது அமைகிறது. உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது, அடிக்கடி ஏற்படும் என்டோமெட்ரியோசிஸ் விளைவான வீக்கம் ஏற்படுவதைக் குறைக்கலாம். கூடுதலாக, போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது, ஒட்டுமொத்த நல்வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமையும். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
இந்த பதிவும் உதவலாம்: Gestational Diabetes Symptoms: கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான காரணங்களும், அறிகுறிகளும் இங்கே.
நல்ல இரவு தூக்கம்
இரவு தூக்கம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான ஒன்றாகும். இந்த எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பல பெண்கள், தங்களது அமைதியான இரவு ஓய்வை அடைய போராடி வருகின்றனர். மேலும், எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களிடையே மனச்சோர்வு, தூக்கமின்மை, சிறுநீர்ப்பை வலி போன்றவை ஏற்படலாம். எனவே, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.
ஆரோக்கியமான உணவுமுறை
ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பராமரிக்க ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளுடன் ஒப்பிடுகையில், இவை அதிக அளவிலான நார்ச்சத்துகள் மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எண்டோமெட்ரியோசிஸ் அபாயத்தைக் குறைப்பதுடன், மூளை செயல்பாடு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகின்றன.
உடற்பயிற்சி செய்தல்
உடல் வலிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதைக் குறைக்க ஆழ்ந்த சுவாசம், தியானம் செய்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்துடன் சேர்த்து மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட வலி மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க தியானம் உதவுகிறது. மேலும், உடல்பருமன் ஹார்மோன் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே உடல் எடை மேலாண்மைக்கு உடற்பயிற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Period Migraines Treatment: மாதவிடாய் ஒற்றைத் தலைவலியை எவ்வாறு சமாளிக்கலாம்
Image Source: Freepik