$
Black Period Blood Reason: மாதந்தோறும் இனப்பெருக்க வயதுடைய பெண்களின் உடலில் ஏற்படும் நிகழ்வே மாதவிடாய் ஆகும். இந்த கால கட்டத்தில், என்டோமெட்ரியம் என்று குறிப்பிடப்படும் கருப்பையின் புறணி, மாதவிடாய் இரத்தம் வடிவில் யோனி வழியாக வெளியேற்றப்படுகிறது. இது நிறம், அமைப்பு மற்றும் ஓட்டம் போன்றவற்றில் மாறுபடும் போது நிகழ்கிறது. வழக்கமாக, மாதவிடாய் இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பான ஒன்றாகும். எனினும், குறிப்பிடத்தக்க மற்றும் திடீர் மாற்றங்கள், அதாவது கருப்பு நிற இரத்தம் வெளியேறும் போது அசௌகரியத்தை அனுபவிக்கலாம்.
ஆரோக்கியமான மாதவிடாய் இரத்தம் உண்மையில் எப்படி இருக்கும் என்பது குறித்து பெங்களூரு, சர்ஜாபூர், தாய்மை மருத்துவமனை, மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர், டாக்டர் ஷெபாலி தியாகி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
ஆரோக்கியமான மாதவிடாய் இரத்தம் எப்படி இருக்கும்
மருத்துவர் தியாகி அவர்களின் கூற்றுப்படி, “மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தம் பிரகாசமான சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாமல், வெவ்வேறு நிறங்களில் வரலாம். ஒருவரின் மாதவிடாய் சுழற்சி முழுவதும், இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறம் என வெவ்வேறு வண்ணங்களில் இரத்தம் இருக்கலாம். ” என்று கூறுகிறார். உண்மையில் மாதவிடாய் இரத்தம் கருப்பு, பச்சை, ஆரஞ்சு அல்லது சாம்பல் நிறமாக இருக்கலாம்.

மருத்துவரின் கூற்றுப்படி, இந்த பல்வேறு நிறங்களுக்கு ஆரம்ப கால கர்ப்பம், தொற்று மற்றும் இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொதுவாக, மாதவிடாயின் தொடக்கத்தில் வெளியேறும் புதிய இரத்தம் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்குm. WebMD-ன் படி, பிரகாசமான சிவப்பு இரத்தம் என்பது இரத்தம் புதிதாக மற்றும் சிறிது நேரம் கருப்பை அல்லது யோனியில் இல்லை என்பது அர்த்தமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
“இதில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பின், இரத்தம் கருமையாகத் தோன்றலாம். குறிப்பாக, உடலில் கட்டிகள் இருப்பின், துருபிடித்த பழுப்பு நிற இரத்தத்தைக் காணலாம். இந்த நிறம், இரத்தம் காற்றோடு வினைபுரியும் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் ஏற்படுவதாகும்” எனக் கூறுகிறார்.
மேலும் மாதவிடாய் இரத்தம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பின், அது லேசான காலமாக இருக்கலாம் என டாக்டர் தியாகி கூறியுள்ளார்.

மாதவிடாய் இரத்தம் கருப்பாக இருப்பதற்கான காரணங்கள்
கரும்பழுப்பு அல்லது கருப்பு நிற மாதவிடாய் இரத்தத்தின் முதன்மையான காரணம், இரத்தம் கருப்பையை விட்டு வெளியேற அதிக நேரம் எடுத்து ஆக்ஸிஜனேற்றம் அடைவதைக் குறிக்கிறது. இது மாதவிடாய் சுழற்சியின் இயல்பான பகுதி மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லை என டாக்டர் தியாகி கூறியுள்ளார். எனினும் இதில் இரத்தப்போக்கு அதிகமாகவும், காய்ச்சல், வலி, அல்லது துர்நாற்றம் போன்ற பிற அறிகுறிகளுடன் இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது என கூறியுள்ளார்.
கூடுதலாக, ஒரு நபர் 3-10 நாள்கள், மற்றும் ஒவ்வொரு 3 முதல் 6 வாரங்களுக்கு இரத்தப்போக்கு அல்லது கருப்பு வெளியேற்றத்தை அனுபவித்தால் இது ஒழுங்கற்றதாகக் கருதப்படுகிறது. இந்த சமயத்தில் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!
கருப்பு இரத்தத்திற்கான பிற பொதுவான காரணங்கள்
- ஹார்மோன் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்துவது
- என்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டுகள், அல்லது கருப்பை பாலிப்கள் போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகள். இவை அரிதான சந்தர்ப்பங்களிலேயே நிகழ்கின்றன.
- சில மருந்துகள், குறிப்பாக இரத்தத்தை மெலிக்கும் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள்
- உணவு அல்லது மன அழுத்தத்தினால் ஏற்படும் மாற்றங்கள். இது ஹார்மோன் சமநிலை மற்றும் மாதவிடாய் ஓட்டத்தைப் பாதிக்கலாம்.

மாதவிடாய் இரத்தத்தில் திசுக்களைக் கண்டறிவது எவ்வளவு இயல்பானது?
மாதவிடாய் இரத்தத்தில் சிறிய திசுக்கள் அல்லது கட்டிகள் இருப்பதை சில உணரிந்திருப்பர். இவை என்ன? மற்றும் எவ்வளவு இயல்பானவை? என்பது குறித்து நினைத்ததுண்டா?
இது குறித்து, மருத்துவர் தியாகி அவர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் சில நேரங்களில் சில கட்டிகள் வெளியேறுவது இயல்பான ஒன்றாகும். இது உண்மையில் இரத்தக் கட்டிகளாகும். அவற்றில் திசுக்களின் பிட்கள் இருக்கலாம். கருப்பை அதன் புறணியை வெளியேற்றும் போது, மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாக இயற்கையாகவே திசு வெளியேறுகிறது. எனவே, இந்த திசு கட்டிகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனினும், அடிக்கடி மற்றும் பெரிய அளவிலான இரத்தக் கட்டிகளைக் கண்டால், மாதவிடாய் காலத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
Image Source: Freepik