தாய்ப்பால் என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும். இது தோலோடு தோல் தொடர்புடையது ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது தான். பாலூட்டும் தாய்மார்கள் தக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியும். குழந்தை பிறந்த பின் உடல் பருமனான பெண்கள், குழந்தைக்கு பாலூட்டுவதால் பிற்காலத்தில் எடை குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய் உடலில் உள்ள கலோரிகள் குறைகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்

மனச்சோர்வை குறைக்கும்:
தாய்ப்பாலூட்டுதல் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே வலுவான பிணைப்பை வளர்க்கிறது. இது தாயின் மனநலத்தை மேம்படுத்துவதுடன் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: Breastfeeding Hygiene: தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது?
பிரசவத்திற்கு பின் மீட்புக்கு உதவும்:
பிரசவத்திற்கு பிறகு கருப்பைச் சுருக்கங்களை சரிசெய்ய தாய்ப்பால் உதவுகிறது. மேலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கை குறைக்கவும், மீட்சியை துரிதப்படுத்தவும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது வெளியிடப்படும் ஆக்ஸிடாஸின், தாய் மற்றும் குழந்தை இடையே தளர்வு மற்றும் பிணைப்பு உணர்வுகளை ஊக்குவிக்கும்.
நோய்களில் இருந்து பாதுகாக்கிறது:
உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி, உயர் இரத்த கொழுப்பு, இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் போன்றவை பாலூட்டுவதால் குறையும்.
உணர்ச்சிப்பூர்வ நிறைவு:
தாய்ப்பால் என்பது ஊட்டமளிக்கும் செயலுக்கு அப்பாற்பட்டு, ஒரு அழகான நெருக்கத்தை ஏற்படுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு ஆழமான உணர்ச்சித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
Image Source: Freepik